சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகில் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கட்டாயம் கல்வி வழங்கவேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது.
பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், 2011 டிசம்பரில் ஐ.நா,சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, ஆண்டுதோறும் அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில், இன்று நாடு முழுவதும் சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களுக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், ஆண், பெண் பாகுபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.
பெண் குழந்தைகள் அனைத்து துறைகளிலும் சாதனை புரிகின்றனர். கல்வி முதல் விளையாட்டு துறை வரை சாதனை புரியும் பெண்களை கண்டு தான் தலைவணங்குவதாக பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
