விடிய விடிய கண் விழித்த மோடி...! திக் திக் நிமிடங்களுக்கு பின் 4.30 மணிக்கு... 

காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நேற்று அதிகாலை இந்திய விமானப்படை நடத்திய வான் வழி தாக்குதலில் பலர் இறந்து விட்டதாக தகவல் வெளியானது.

இந்திய விமான படை பாக் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்திய தினம் இரவு பிரதமர் நரேந்திர மோடி விடிய விடிய உறங்காமல் இருந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினத்தில், தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட விமானம் மீண்டும் இந்திய எல்லைக்குள் பத்திரமாக வர வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்துள்ளார் மோடி.

அதாவது, கடந்த திங்கட்கிழமை இரவு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, 9.25 மணிக்கு வீடு திரும்பிய மோடி, இரவு உணவை கூட சரியாக எடுத்துக்கொள்ளாமல் முழு கண்காணிப்பில் தன்னை ஈடுபடுத்தி உள்ளார்.

இவை அனைத்தையும் அவர் வீட்டில் இருந்து கண்காணித்தாரா அல்லது வேறு ஏதாவது சிறப்பு ஏற்பாட்டுடன் கவனித்தாரா என்பது குறித்து சரிவர தெரியவில்லை. ஆனாலும் அன்றைய நாள் முழுதும் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், விமானப்படை தலைவர் பி.எஸ்.தானோவ் ஆகியோருடன் தொடர்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பின்னர் தாக்குதல் நடத்திவிட்டு வெற்றிகரமாக திரும்பி வந்த ராணுவ வீரர்களை பார்த்து சல்யூட்அடித்து உள்ளார் மோடி. அன்றைய தினத்தில், அதிகாலை 4.30 மணிக்கு தாக்குதலில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து உள்ளார் மோடி என வருடைய நெருங்கிய வட்டாரங்கள் தகவலை கசிந்துள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.