Asianet News TamilAsianet News Tamil

102 வயதிலும் அசத்தும் மூதாட்டி... ஓட்டப் பந்தயத்தில் உலக சாம்பியன்!

சண்டிகரைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி ஸ்பெயினில் நடந்த உலக முதியோருக்கான ஓட்டப் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் பெற்றும், ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கமும் வென்று அசத்தியுள்ளார்.

Miracle Woman Man Kaur athletics medals
Author
Chandigarh, First Published Sep 24, 2018, 11:25 AM IST

சண்டிகரைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி ஸ்பெயினில் நடந்த உலக முதியோருக்கான ஓட்டப் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் பெற்றும், ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கமும் வென்று அசத்தியுள்ளார். Miracle Woman Man Kaur athletics medals

ஸ்பெயினின் மலாக்காவில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன் போட்டி நடந்தது. இதில் 100 வயது முதல் 104 வயதுடையவர்கள் பங்கேற்றனர். இதில் இந்திய மூதாட்டி மான்கவுர் 200 மீ்ட்டர் ஓட்டத்தில் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.  இதுதவிர ஈட்டி எறிதல் போட்டியிலும் மான் கவுர் தங்கம் வென்றார்.

 Miracle Woman Man Kaur athletics medals

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் உலக மாஸ்டர்ஸ் தடகளப் போட்டிக்கும் மான்கவுர் தயாராகி வருகிறார். இதுகுறித்து மான்கவுர் கூறுகையில், கோதுமை ரொட்டிதான் எனது உணவு. நன்றாகச் சாப்பிடுவதும், அதற்கு தகுந்தார்போல் உடற்பயிற்சி மேற்கொள்வதும் எனது நீண்ட ஆயுளுக்கு காரணம் எனத் தெரிவித்தார்.

 Miracle Woman Man Kaur athletics medals

இவரின் 80வயது மகன் குர்தேவ் சிங் சர்வதேச ஓட்டப்போட்டி, தடகளப் போட்டியிலும் பங்கேற்றுள்ளார். அவர் கூறுகையில், நான் வெளிநாடு செல்லும் போது பல பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதை பற்றி என் அம்மாவிடம் தெரிவித்தேன். எந்த நோய் பாதிப்பும் இல்லாத அவரை 100மீ, 200மீ, ஓட்டப்போட்டிக்குத் தயார் செய்தேன். 2021-ம் ஆண்டில் எனது தாய்க்கு 105 வயதாகும். அப்போது ஜப்பானில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறார் எனத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios