Asianet News TamilAsianet News Tamil

நவராத்திரி குறித்து முகநூலில் சர்ச்சை பதிவு... கல்லூரி விரிவுரையாளர் டிஸ்மிஸ்!!

நவராத்திரி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததை அடுத்து வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீடம் கல்லூரி விரிவுரையாளரை பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது. 

mgkv removes guest lecturer over controversial fb post on navratri
Author
First Published Sep 30, 2022, 8:57 PM IST

நவராத்திரி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததை அடுத்து வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீடம் கல்லூரி விரிவுரையாளரை பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக விரிவுரையாளர் மிதிலேஷ் குமார் கௌதம் என்பவர், நவராத்திரி குறித்து தனது முகநூல் பக்கத்தில், ஒன்பது நாட்கள் நவராத்திரி விரதத்தை விட, பெண்கள் ஒன்பது நாட்கள் இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்து சட்ட மசோதாவைப் படிப்பது சிறந்தது, அவர்களின் வாழ்க்கை அடிமைத்தனம் மற்றும் பயத்திலிருந்து விடுபடும். ஜெய் பீம் என்று தெரிவித்திருந்தார். அவரின் இந்த பதிவு சர்ச்சையை கிளப்பியது. 

இதையும் படிங்க: ஆம் ஆத்மி தலைவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்.. அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு பேட்டி

mgkv removes guest lecturer over controversial fb post on navratri

மேலும் இப்பதிவு குறித்து மகாத்மா காந்தி காசி வித்யாபீடம் இந்து மதத்திற்கு எதிரானது என்றும், பல்கலைக்கழகத்தின் சூழலை கெடுக்கிறது என்றும் கூறியது. இதை அடுத்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விரிவுரையாளர் மிதிலேஷ் குமார் கௌதமை பணியிலிருந்து நீக்கி பல்கலைக்கழக பதிவாளர் சுனிதா பாண்டே உத்தரவிட்டுள்ளார். இதுக்குறித்த அவரது உத்தரவில், 29.09.2022 அன்று விரிவுரையாளர் மிதிலேஷ் குமார் கெளதம் மூலம் இந்து மதத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் பதிவிட்ட கருத்து குறித்து பல்கலைக்கழக மாணவர்களால் புகார் கடிதம் வந்தது.

இதையும் படிங்க: ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட பிரதமர் மோடி... சாலையோரம் நிறுத்தப்பட்ட கான்வாய்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

mgkv removes guest lecturer over controversial fb post on navratri

கெளதம் செய்த செயலால், பல்கலைக் கழக வளாக மாணவர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு, பல்கலைக் கழகத்தின் சூழலை கெடுத்து, தேர்வு மற்றும் சேர்க்கைக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. இது தொடர்பாக, பல்கலைக் கழக விதிகளின்படி, மிதிலேஷ் குமார் கெளதம் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios