ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட பிரதமர் மோடி... சாலையோரம் நிறுத்தப்பட்ட கான்வாய்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
ஆம்புலன்ஸுக்காக பிரதமர் மோடி தனது கான்வாய் வாகனங்களை நிறுத்தியதை அடுத்து பலரும் அவரது செயலை பாராட்டி வருகின்றனர்.
ஆம்புலன்ஸுக்காக பிரதமர் மோடி தனது கான்வாய் வாகனங்களை நிறுத்தியதை அடுத்து பலரும் அவரது செயலை பாராட்டி வருகின்றனர். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க 2 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி சூரத், பாவ்நகர், அகமதாபாத் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அந்த வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலான வந்தே பாரத் சிறப்பு ரயிலையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: இந்தியாவில் பயன்பாட்டுக்கு வருகிறது 5G சேவை... நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!!
பின்னர் அகமதாபாத்தில் இருந்து கிளம்பிய பிரதமர் மோடி, காந்தி நகருக்குச் சாலை வழியாக சென்றுக்கொண்டிருக்கையில் ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. இதை அறிந்த பிரதமர் மோடி ஆம்புலன்ஸுக்கு வழிவிடும்படி கூறியுள்ளார். இதை அடுத்து அவரது கான்வாய்கள் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ் எவ்வித இடையூறும் இன்றி பிரதமரின் கான்வாயை தாண்டி சென்றது. இதுத்தொடர்பான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டதை அடுத்து வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: மின்வாரிய ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது - ஆளுநர் விளக்கம்
பிரதமர் மோடியின் இந்த செயலை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோவை உண்மையான தலைவர் என்ற தலைப்பில் குஜராத் பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. முன்னதாக ஆமதாபாத்தில் 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து பாவ்நகர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.