ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக விரைவில், மலிவு விலையில் அத்தியாவசிய ஜெனரிக் மருந்துகள் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமாக பதில் அளித்து மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ராஜன் கோ கெயின் பேசினார்.

அவர் பேசுகையில், “நாட்டில் உள்ள அனைத்த ரெயில் நிலையங்களிலும்,பிரதமர் பாரதிய ஜன்அவுஷதி பரியோஜனா திட்டத்தின் கீழ் ‘ஜன்அவுஷசதி’ மருந்துக் கடைகள் திறக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

மத்திய ரசாயன மற்றும் உரத்துறை, மத்திய மருந்துத்துறை ஆகியவை மூலம் முறைப்படி பிரசாரம் தொடங்கப்பட்டு, தரமான மருந்துகள் குறைந்தவிலையில்ரெயில் நிலையத்தில் மக்கள் பெறலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

இரு துறைகளும் இணைந்து ரெயில்வே நிலையங்களில் மருந்துக்கடைகள் திறக்க கொள்கை ரீதியாக ஒப்புக் கொண்டுள்ளன. தற்போது 22 கடைகள் சோதனை அடிப்படையில் ரெயில் நிலையங்ளில் செயல்பட்டு வருகின்றன’’ என்று தெரிவித்தார்.