கேரளாவின் திருச்சூர் ரயில் நிலையத்தில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவின் திருச்சூர் ரயில் நிலையத்தில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ரயில் நிலையத்தின் இரண்டாவது நுழைவாயிலுக்கு அருகே உள்ள பைக் பார்க்கிங் பகுதியில் தீப்பிடித்து, பல இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு 600க்கும் மேற்பட்ட பைக்குகள் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் இரண்டு பைக்குகளில் ஏற்பட்ட தீ, வேகமாக பரவி அருகிலுள்ள மரத்திற்கும் பரவியுள்ளது. இதனால் இரண்டாவது நுழைவாயிலில் அமைந்திருந்த டிக்கெட் கவுண்டர் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு இன்ஜினும் தீக்கிரையாகி, பின்னர் பாதுகாப்பு காரணமாக அப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டது.

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், தீ இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.