- Home
- உலகம்
- இந்தியர்கள் வீட்டிலேயே இருக்க அறிவுரை.. மத்திய அரசு கொடுத்த பெரிய வார்னிங்.. முழு விபரம் உள்ளே!
இந்தியர்கள் வீட்டிலேயே இருக்க அறிவுரை.. மத்திய அரசு கொடுத்த பெரிய வார்னிங்.. முழு விபரம் உள்ளே!
தற்போது இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் இந்திய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்களை முழுமையாக இங்கு பார்க்கலாம்.

வெனிசுவேலாவில் அமெரிக்கா மேற்கொண்டதாக கூறப்படும் ராணுவ நடவடிக்கை மற்றும் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல்கள் தொடர்ந்து, இந்திய குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டில் போராட்டங்கள், மோதல்கள் மற்றும் அரசியல் பதற்றம் அதிகரித்து வருவதால் இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வெனிசுவேலாவில் வசிக்கும் இந்தியர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், தேவையற்ற வெளியேறலைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அங்கு இருக்கும் இந்தியர்கள் தங்கள் வசிப்பிடங்களிலேயே பாதுகாப்பாக தங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அவசர உதவி தேவைப்படும் சூழலில், காரகஸ் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொண்டு வழிகாட்டுதல் மற்றும் உதவியைப் பெறலாம் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை, வெனிசுவேலாவில் அமெரிக்கா நடத்தியதாக கூறப்படும் தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பிறகு வெளியாகியுள்ளது. தகவல்களின்படி, அமெரிக்காவின் சிறப்புப் படையான டெல்டா ஃபோர்ஸ் ரகசியமாக நாட்டுக்குள் நுழைந்து, அதிபர் மதுரோவும், அவரது மனைவியும் அவர்களின் இல்லத்தில் இருந்து கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வெனிசுவேலாவின் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ராணுவத்தை மீறி இந்த நடவடிக்கை எவ்வாறு நடத்தப்பட்டது என்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்த சம்பவம் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுவேலாவுடன் நெருங்கிய உறவை பேணும் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் விமர்சனம் தெரிவித்துள்ளன.
இதுவரை இந்தியா அரசு அதிகாரப்பூர்வமான நிலைப்பாட்டை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு, வெனிசுவேலாவிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

