manmogan singh said communist support wanted for opposition to bjp
பா.ஜனதாவின் தவறான கொள்கைகளை எதிர்க்க கம்யூனிஸ்ட் கட்சிகள் காங்கிரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
பிரித்தாளும் கொள்கை
கேரள மாநிலம் கொச்சியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-
பா.ஜ., தவறான ஆட்சி நிர்வாகத்தை அளித்து வருகிறது. தேசிய அளவில் பிரித்தாளும் கொள்கையை கடைபிடிக்கும் பா.ஜ.,வை எதிர்க்க, காங்., கட்சிக்கு கம்யூனிஸ்ட் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்.
பொருளாதார வீழ்ச்சி
ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டதன் காரணமாக இழப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து உடனடியாக தேசம் மீண்டு வரும் என தோன்றவில்லை.
கடந்த 2015-16 நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, இந்த நிதியாண்டில்(2017-18) 5.7 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
வரலாற்று பிழை
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை வரலாற்று பிழையாகும். ஜி.எஸ்.டி., முறையால் சிறு, குறு தொழில் புரியும் வர்த்தகர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்
