Asianet News TamilAsianet News Tamil

மணிஷ் சிசோடியாவை மேலும் 5 நாட்கள் காவல் நீட்டிப்பு... டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!

மணிஷ் சிசோடியாவை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

manish sisodias custody extended for 5 more days by delhi court
Author
First Published Mar 17, 2023, 6:00 PM IST

மணிஷ் சிசோடியாவை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த பிப்.26 ஆம் தேதி கைது செய்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை மார்ச்.20 ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அடுத்து அவர், திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு உள்பட ஏழு மாநிலங்களில் பிஎம் மித்ரா மெகா ஜவுளிப் பூங்கா; பிரதமர் மோடி அறிவிப்பு!!

இதனிடையே சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் அவர் மீது தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதனால் சிபிஐ வழக்கில் மணீஷ் சிசோடியா விசாரணைக்கு பிறகு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்தது. இந்த நிலையில் அவரை அமலாக்கத்துறை கைது செய்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

இதையும் படிங்க: திடீரென ஹார்ட் அட்டாக் வர கொரோனா தடுப்பூசி காரணமா? விளக்கமளித்தது மத்திய சுகாதாரத்துறை!!

அவரை ஏழு நாள்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்தனர். இந்த நிலையில், அமலாக்கத்துறை காவல் நிறைவடைந்த நிலையில், மேலும் அவகாசம் கோரி அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதை அடுத்து மணிஷ் சிசோடியாவை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

Follow Us:
Download App:
  • android
  • ios