Asianet News TamilAsianet News Tamil

திடீரென ஹார்ட் அட்டாக் வர கொரோனா தடுப்பூசி காரணமா? விளக்கமளித்தது மத்திய சுகாதாரத்துறை!!

கொரோனா தடுப்பூசியால் திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது என்பதற்கு எந்தவித அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

corona vaccine is not reason for sudden heart attack says central health dept
Author
First Published Mar 17, 2023, 5:46 PM IST

கொரோனா தடுப்பூசியால் திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது என்பதற்கு எந்தவித அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மக்களவை உறுப்பினர் ராஜூ ரஞ்சன் சிங் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு அதிகளவில் திடீர் ஹார்ட் அட்டாக் ஏற்படுவது குறித்து எந்த தரவுகளும் அரசிடம் இல்லை.

இதையும் படிங்க: சீக்கியர்களுக்கு பிரதமர் நிறைய செய்து இருக்கிறார்: காலிஸ்தான் முன்னாள் தலைவர் ஜஸ்வந்த் சிங் திகேதர் புகழாரம்!

கொரோனா தடுப்பூசியால்தான் இது ஏற்படுகிறது என்பதற்கு எந்தவித அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தியாவில் ஹார்ட் அட்டாக்கால் ஏற்படும் உயிரிழப்புகள் 28.1 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக 30-60 வயது நபர்களின் உயிரிழப்பு 3 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்ததாகவும் மத்திய அரசு அண்மையில் தெரிவித்திருந்தது. இளம் வயதினர் ஹார்ட் அட்டாக்கால் ஏற்படும் பிரச்சனைக்கு பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளாததே 98.4 சதவீதம் காரணம் என விளக்கம் அளித்திருந்தது.

இதையும் படிங்க: தமிழ்நாடு உள்பட ஏழு மாநிலங்களில் பிஎம் மித்ரா மெகா ஜவுளிப் பூங்கா; பிரதமர் மோடி அறிவிப்பு!!

மேலும் புகையிலை பயன்பாடு காரணமாக 32.8 சதவீதம் பேருக்கும், மதுபான பயன்பாட்டின் காரணமாக 15.9 சதவீதம் பேருக்கும், போதிய உடற்பயிற்சியின்மை காரணமாக 41 சதவீதம் பேருக்கும் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னரே இளம்வயதினருக்கு ஹார்ட் அட்டாக் அதிகம் ஏற்படுவதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அதற்கு விளக்கம் அளித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios