மணிப்பூரில் சதிவேலையே கலவரத்துக்கு காரணம்; ஆயுதங்களை ஒப்படைக்க அமித்ஷா அழைப்பு!!
ஓய்வு பெற்ற நீதிபதி மணிப்பூர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் கலவரம் வெடித்து இருக்கும் நிலையில், பல்வேறு குழுவினருடன் அமித் ஷா ஆலோசனை மற்றும் விசாரணை மேற்கொண்டு வருகிறார். வடகிழக்கு மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலம் மணிப்பூர். மிகவும் அரசியல் முக்கியத்துவம் பெற்ற மாநிலம். இங்கு கடந்த மாதம் திடீரென இடஒதுக்கீடு தொடர்பான நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் கலவரம் வெடித்தது.
இதையடுத்து இந்த மாநிலத்திற்கு வந்திருக்கும் உள்துறை அமைச்சர் பல்வேறு குழுக்களின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். இன்று அவர் அளித்து இருக்கும் பேட்டியில், ''மணிப்பூர் கலவரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அமைக்கப்படுவார். கலவரத்தில் உறுப்பினர்களை இழந்தவர்களின் குடும்பத்துக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசின் சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.8000 சம்பள உயர்வு? விரைவில் வெளியாக உள்ள குட்நியூஸ்!
கல்வித்துறை அதிகாரிகள் மாநிலத்தை அணுகுவார்கள். கல்வி எந்த வகையிலும் தடைபடாமல் தொடருவதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள். அதற்கு முன்பு கலந்தாலோசனை செய்வார்கள். ஆனலைன் கல்வி மற்றும் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். குகி பகுதிக்கு கூடுதலாக 30,000 மெட்ரிக் டன் அரிசி மற்றும் மருத்துவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
மணிப்பூரில் கலவரம் வெடித்தது குறித்து ஆய்வு மேற்கொள்ள பல்வேறு குழுக்கள் பணியாற்றி வருகின்றன. சதி வேலை காரணமாக ஆறு முறை கலவரங்கள் வெடித்து இருப்பது சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது. நாங்கள் உறுதியாக கூறுகிறோம். எந்த பாரபட்சமும் இல்லாமல் விசாரணை நடைபெறும். நாளை முதல் தேடுதல் நடவடிக்கை தொடங்கும். அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், ஆயுதங்களை காவல்துறையிடம் ஒப்படைத்து விடவேண்டும்.
எந்தவொரு போலிச் செய்திகளையும் பரப்பவோ அல்லது நம்பவோ வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். மியான்மர் எல்லையில் குறைந்தபட்சம் 10 கிலோமீட்டர் வரை வேலி அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதி விரைவில் பாதுகாப்பு எல்லைக்குள் கொண்டு வரப்படும்'' என்றார்.