அந்தரங்க உறுப்பில் பிளேடால் பெயரை எழுத சொல்லி டார்ச்சர்... பெண் கொடுத்த புகாரின் பேரில் இளைஞர் கைது!!
உத்திரபிரதேசத்தில் 25 வயதுடைய பெண் ஒருவரை அவரது அந்தரங்க உறுப்பில் தன் பெயரை பிளேடால் எழுத சொல்லி வற்புறுத்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்திரபிரதேசத்தில் 25 வயதுடைய பெண் ஒருவரை அவரது அந்தரங்க உறுப்பில் தன் பெயரை பிளேடால் எழுத சொல்லி வற்புறுத்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முன்னதாக குற்றவாளிகள் சிறுமியை கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். மேலும் தனது பெயரை அந்தரங்க உறுப்பில் எழுதாவிட்டால் பெற்றோரை கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதுக்குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த நபருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அதன்படி, பாதிக்கப்பட்ட மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் லக்னோவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் நர்சிங் படித்து வந்ததும் இருவரும் மால் பகுதியில் உள்ள சிஎச்சியில் இன்டர்ன்ஷிப் செய்து வருவதும் தெரியவந்தது.
இதையும் படிங்க: சமாளிக்குமா பாஜக! தெற்கு குஜராத்தில் சவாலாகிய ஆம் ஆத்மி, பழங்குடியினர்: ஓர் அலசல்
இதுக்குறித்து மேற்கு ஏடிசிபி சிரஞ்சீவ் நாத் சின்ஹா கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட அவேந்திரா சோன்வாலி, சிறுமியுடன் நட்பாக பழகி, அவரது மோசமான திட்டங்களை செயல்படுத்த வாட்ஸ்அப் அழைப்புகள் மூலம் சிறுமியிடம் பேசத் தொடங்கினார். சிறுமியிடம் தான் காதலிப்பதாகவும், விரும்புவதாகவும் கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் சம்மதம் தெரிவிக்காவிட்டாலும் அவளை தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். மேலும் சிறுமி தங்கியிருந்த அறைக்கு சென்று கத்தி முனையில் சில ஆபாச வீடியோக்களை அவர் எடுத்துள்ளார். அத்தோடு மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ரோஜ்கர் மேளா! 71 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி
இத்தோடு நிறுத்திவிடவில்லை. சமீபத்தில், மீண்டும் அந்த பெண்ணுக்கு வீடியோ கால் செய்து, தன்னை திருமணம் செய்யாவிட்டால், அவளையும், பெற்றோரையும் கொன்றுவிடுவேன் என்றும் வீடியோ அழைப்பில் ரத்தத்தை தன்னிடம் காட்டுமாறு பெண்ணிடம் கேட்டுள்ளார். குற்றவாளி அவேந்திரா, பாதிக்கப்பட்ட பெண்ணை பிளேடை எடுக்க வைத்து, கை, மார்பை அறுத்து ரத்தத்தை காட்ட வைத்து, மொபைலில் படம் பிடித்துள்ளார். பின்னர் அவர் வீடியோவை சமூக ஊடக தளங்களில் வெளியிட்டார். இது தொடர்பாக புகார் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். மேலும் சிறுமியின் வாக்குமூலத்தை காவல்துறை மற்றும் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்பு பதிவு செய்தோம், அதன் அடிப்படையில் நாங்கள் அந்த நபரை கைது செய்தோம் என்று தெரிவித்துள்ளார்.