Asianet News TamilAsianet News Tamil

இணையதளம் கொண்டாடும் நிஜ பாகுபலி இவர்தான்; அதிர்ச்சியில் உறைய வைக்கும் வைரல் வீடியோ!!

இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு நபர் தனது தலையில் கனரக மோட்டார் சைக்கிளை தூக்கிச் செல்வதும், பின்னர் அந்த வாகனத்தை தலையில் சுமந்தவாறு பேருந்தில் ஏற்றுவது மாதிரியான வீடியோ வைரலாகி வருகிறது. 

Man Climbs Bus Ladder With heavy Motorbike On His Head Video goes viral
Author
First Published Nov 26, 2022, 12:44 PM IST

இந்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தலையில் கனரக மோட்டார் சைக்கிளை சுமந்து செல்லும் அந்த நபர் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் பேருந்தை நோக்கி நடந்து செல்கிறார். தலையில் கனரக மோட்டார் சைக்கிளை சுமந்து செல்லும்போது, கையை சில வினாடிகள் எடுத்து விடுகிறார். அப்படியே பேருந்து மீது சாய்த்து வைக்கப்பட்டு இருக்கும் ஏணி முன்பு சில நொடிகள் நின்று பேலன்ஸ் செய்து கொள்கிறார். பின்னர் உடையும் நிலையில் இருக்கும் ஏணிப் படிக்கட்டுகளில் ஏறுகிறார். 

அப்போது அவர் மோட்டார் சைக்கிளை கைகளால் தாங்கிப் பிடிக்கவில்லை. தலையில் வைத்தவாறு படிகளில் ஏறி பேருந்தின் மேற்கூரையில் வெற்றிகரமாக வைக்கிறார். 

Watch : அல்ட்ரா வயலட் F77 இ-பைக் இந்தியாவில் அறிமுகம்! ஒரே சார்ஜில் 307கி.மீ பயணம்!

இந்த வீடியோ பகிரப்பட்ட 24 மணி நேரத்தில் 85 ஆயிரம் பேர் இதுவரை பார்த்துள்ளனர். வீடியோவை பார்த்த இணையவாசிகளை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. 5.5 ஆயிரம் பேர் இதுவரை லைக் செய்துள்ளனர். 

பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஒருவர் தனது பதிவில், ''ஜார்கண்ட் ஆதிவாசியின் திறமை, ஜார்கண்டில் இருக்கும் கன்டாடோலி பேருந்து நிலையத்தில் எடுக்கப்பட்டது'' என்று பதிவிட்டுள்ளார். பலரும் அவரை, "சூப்பர்மேன்" என்று பதிவிட்டுள்ளனர். ''கழுத்து வலிமை எனக்கு தேவை'',  உண்மையான பாகுபலி'', "இது வீரமல்ல... அவர்கள் குடும்பத்திற்கு உணவளிக்க வேண்டிய நிர்பந்தம். ரிஸ்க் எடுத்தால்தான் அன்று அவர்கள் சாப்பிட முடியும்... அவர்கள் சுரண்டப்படுகிறார்கள்" என்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

தென்னந்தோப்பிற்குள் 12 அடி நீள மலை பாம்பு… அதிர்ச்சியில் உறைந்த தோப்பின் உரிமையாளர்!!

எங்கு, எப்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று தெரியாவிட்டாலும், இணையவாசிகள் இந்த வீடியோ ஜார்கண்டில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios