Asianet News TamilAsianet News Tamil

தென்னந்தோப்பிற்குள் 12 அடி நீள மலை பாம்பு… அதிர்ச்சியில் உறைந்த தோப்பின் உரிமையாளர்!!

கோவை அருகே தென்னந்தோப்பிற்கு 12 அடி நீள மலைப்பாம்பு இருந்தது தோப்பின் உரிமையாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

கோவை அருகே தென்னந்தோப்பிற்கு 12 அடி நீள மலைப்பாம்பு இருந்தது தோப்பின் உரிமையாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் உள்ள எட்டிமடை பகுதியை சேர்ந்தவர் சண்முகம். விவசாயம் செய்யும் இவர் தனது வீட்டருகே தென்னை தோப்பை வளர்த்து வருகிறார்.

இதையும் படிங்க: மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது அவசியம்... அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்!!

இந்த நிலையில் அவரது தோப்பிற்குள் சுமார் 12 அடி நீளமுள்ள மலைபாம்பு ஒன்று இருந்துள்ளது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், பாம்பு பிடிக்கும் WHCT அமைப்பினருக்கு தகவல் அளித்தார்.

இதையும் படிங்க: அடுத்த 25 ஆண்டுகள் கடுமையானதாக இருக்கும்… ஆளுநர் ஆர்.என்.ரவி எச்சரிக்கை!!

அதன்பேரில் அங்கு வந்த பாம்பு பிடி வீரர்கள், மலைப்பாம்மை பத்திரமாக பிடித்து அதனை மதுக்கரை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.  இதனையடுத்து அந்த மலைபாம்பு அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு சிறுது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. 

Video Top Stories