வலுவான கூட்டாச்சி வேண்டும் என்பது தான் தங்கள் நோக்கம் எனவும் மாநிலங்கள் வலுவாக இருந்தால் தான் மத்திய அரசு வலுவாக இருக்க முடியும்  எனவும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

மத்திய பாஜக அரசிற்கு எதிராக தேசிய ஓங்கி ஒலிக்கும் குரல்களில் பிரதானமானது மம்தா பானர்ஜி குரல். பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராகவும், பாஜக-காங்கிரஸுக்கு மாற்றாக மூன்றாவது தேசிய அணியை உருவாக்குவதிலும் மும்முரமாக செயல்பட்டு வருகிறார் மம்தா பானர்ஜி. 

பாஜக-காங்கிரஸுக்கு மாற்றாக மூன்றாவது தேசிய சக்தியை உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இப்படியான சூழலில், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுப்பதால், மத்திய பாஜக அரசில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சி, பாஜகவுடனான கூட்டணியிலிருந்து விலகியுள்ளது. மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த மம்தா, வலுவான கூட்டாச்சி வேண்டும் என்பது தான் தங்கள் நோக்கம் எனவும் மாநிலங்கள் வலுவாக இருந்தால் தான் மத்திய அரசு வலுவாக இருக்க முடியும்  எனவும் தெரிவித்துள்ளார்.