பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய வேண்டும்... மகிந்த ராஜபக்ச வாழ்த்து!!
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய வேண்டும் என இலங்கையின் முன்னாள் அதிபரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய வேண்டும் என இலங்கையின் முன்னாள் அதிபரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: தாய் ஹீராபென்னை சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி!
தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து பிரதமர் மோடி மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது தாயாரை சந்தித்ததோடு தாயாரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பேசும் தமிழுக்கு ரூ.74 கோடி! பேசாத சமஸ்கிருதத்துக்கு ரூ.1,488 கோடி ஒதுக்கிய மத்திய அரசு
அந்த வகையில் இலங்கையின் முன்னாள் அதிபரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்சவும் பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், எனது நல்ல நண்பரான பிரதமர் மோடியின் தாயார் ஸ்ரீமதி ஹீராபென் மோடி விரைவில் குணமடைய வேண்டும். அவர் விரைவில் குணமடையவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.