மகாராஷ்டிராவில் எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டம், கலம்ப் தாலுகாவில் உள்ள வாஹாபூர் என்ற கிராமத்தை சேர்ந்த காம்ப்ளே என்பவரின் இல்லத்தில் நடந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நிகழ்ச்சி நிறைவு முடிந்த பிறகு அந்த இரு குடும்பத்தினரும் தாங்கள் வந்த ஜீப்பில் சொந்த ஊருக்கு திரும்பினர்.

 

நேற்று இரவு யவத்மால்-கலம்ப் தேசிய நெடுஞ்சாலையில் ஜீப் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் இருந்து எரிவாயு ஏற்றிய இந்தியன் ஆயில் கார்பரேஷனுக்கு சொந்தமான டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையில் தாறுமாறாக சென்றது. அப்போது எதிரே வந்த டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் ஜுப் அப்பளம் போல் நொறுங்கியது.  

இந்த விபத்தில் 11 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.