மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு.. பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து..

மக்களவை சபாநாயகராக பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.

Lok Sabha Speaker Election : NDA candidate Om Birla elected as LS speaker Rya

பொதுவாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருமனதாக போட்டியின்றி ஒருவரை தேர்ந்தெடுப்பது மரபு. இதனால் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படுவதில்லை. ஆனால் சபாநாயகர் பதவி தொடர்பாக மத்திய அரசு எதிர்க்கட்சிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இன்று சபாநாயகர் தேர்தல் நடந்தது.

18-வது மக்களவை சபாநாயகராக பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.குரல் வாக்கெடுப்பு மூலம் அவர் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். மக்களவையில் அதிகாரமிக்க சபாநாயகர் பதவிக்கு தொடர்ந்து 2-வது முறையாக அவர் தேர்வாகி உள்ளார். 

மோடியோடு கை கோர்த்த ராகுல் காந்தி... புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகரை இருக்கையில் அமரவைத்து வாழ்த்து

இதில் சபாநாயகராக தேர்வானதன் மூலம் கடந்த 25 ஆண்டுகளில் தொடர்ந்து 2 முறை சபாநாயகரான பெருமையை பெற்றுள்ளார் ஓம் பிர்லா. இவர் ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் இருந்து 3-வது முறையாக எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.

48 ஆண்டுகளுக்கு பிறகு மக்களவை சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இதற்கு முன் 1952, 1967, 1976 ஆகிய ஆண்டுகளில் சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றிருந்தது. 

புதிய சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வானதை தொடர்ந்து சபாநாயகர் இருக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் ஓம் பிர்லாவை அழைத்து சென்று அவருக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் " நீங்கள்( ஓம் பிர்லா) இரண்டாவது முறையாக இந்த நாற்காலியில் அமர்ந்திருப்பது அவையின் அதிர்ஷ்டம்" என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

அரசியலை விட்டு விலகும் எண்ணம் இல்லை! முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உறுதி

தொடர்ந்து பேசிய அவர் “ தேசத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இந்த அவை உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். 18-வது மக்களவை பல்வேறு சாதனைகளை அடுத்தடுத்து படைத்து வருகிறது. காங்கிரஸ் உறுப்பினர் பலராம் ஜாக்கருக்கு பிறகு 2-வது முறையாக சபாநாயகராகி உள்ளார் ஓம் பிர்லா. மக்களவையில் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு ஓம் பிர்லா காரணமாக இருந்தார். 

நாடு சுதந்திரம் அடைந்து 70 வருடங்களில் நடக்காத பணிகள் உங்கள் தலைமையில் இந்த சபையால் சாத்தியமாகியுள்ளன. ஜனநாயகத்தின் நீண்ட பயணத்தில் பல மைல்கற்கள் வருகின்றன. சில சந்தர்ப்பங்களில் மைல்கற்களை நிலைநிறுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் 17வது லோக்சபாவின் சாதனைகளால் நாடு பெருமிதம் கொள்ளும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது.” என்று தெரிவித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios