மோடியோடு கை கோர்த்த ராகுல் காந்தி... புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகரை இருக்கையில் அமரவைத்து வாழ்த்து

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடியும், எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் ஒன்றாக இணைந்து சபாநாயகர் இருக்கையில் ஓம்,. பிர்லாவை அமவைத்தனர். 
 

Modi and Rahul Gandhi installed the newly elected Lok Sabha Speaker in the Speaker's seat KAK

மக்களவை சபாநாயகர் யார்.?

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் யாருக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் கூட்டணி கட்சிகளின் உதவியோடு பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இதனையடுத்து புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்காக ஒடிசாவை சேர்ந்த மகதாப்பை தற்காலிக சபாநாயகராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் பதவியேற்றுக்கொண்டனர். இந்தநிலையில் மக்களவை புதிய சபாநாயகரை ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்க ஆளும் பாஜக திட்டமிட்டது. ஆனால் எதிர்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதனை பாஜக மறுத்த நிலையில் சபாநாயகர் இருக்கையை பிடிப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற மக்களவை சபாநாயகர் தேர்தல்... ஓம் பிர்லா vs கே.சுரேஷ்; வென்றது யார்?

Modi and Rahul Gandhi installed the newly elected Lok Sabha Speaker in the Speaker's seat KAK

பாஜக- காங்கிரஸ் போட்டி

பாராளுமன்ற வரலாற்றில் மூன்றாவது முறையாக நடைபெற்ற தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்கட்சிகள் சார்பில் மவெலிக்கரா எம்.பி. கே. சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பாக ஓம் பிர்லாவை சபாநாயகராக முன்மொழிந்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதே போல இந்தியா கூட்டணி கட்சி சார்பாக  கே. சுரேஷ் ஆதவாக தீர்மானம் முன்மொழியப்பட்டது. இறுதியில் பாஜக சார்பாக நிறுத்தப்பட்ட ஓம் பிர்லா சபாநாயகராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து சபாநாயர் ஓம்.பிர்லாவின் இருக்கைக்கு சென்ற பிரதமர் மோடி கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இதே போல எதிர்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தியும் ஓம்.பிர்லா அமர்ந்திருந்த இருக்கைக்கு சென்று வாழ்த்து தெரிவிட்டார். அப்போது பிரதமர் மோடிக்கும் ராகுல் காந்தி கை குலுக்கினார்.

 

சபாநாயகர் இருக்கையில் ஓம்,பிர்லா

இதனையடுத்து புதிய சபாநாயகர் ஓம்.பிர்லாவை சபாநாயகர் இருக்கைக்கு மோடி மற்றும் ராகுல் காந்தி அழைத்து சென்றனர். அங்கு சபாநாயகர் இருக்கையில் ஓம்.பிர்லாவை பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் சேர்ந்து அமரவைத்தனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios