ஜன் கீ பாத் எக்ஸிட் போல் 2024: விண்ணை முட்டும் ஆதரவுடன் வெல்லும் பாஜக! மீண்டும் மோடி ஆட்சி!
2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஜன் கீ பாத் நடந்திய எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. 3.5 லட்சம் பேரிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அறுதி பெரும்பான்மை உறுதி என்று கூறப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஜன் கீ பாத் நடந்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. 3.5 லட்சம் பேரிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அறுதி பெரும்பான்மை உறுதி என்று கூறப்பட்டுள்ளது.
பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி 377 தொகுதிகளில் வெல்லும் என்றும் இந்தியா கூட்டணி 151 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுக்கு 15 இடங்கள் கிடைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தனித்து 327 தொகுதிகளை வென்று அறுதிபெரும்பான்மை பெறும் எனவும் காங்கிரஸ் கட்சி 52 இடங்களை மட்டும் பெறும் எனவும் கணித்துள்ளது.
என்.டி.ஏ. கூட்டணிக்கு 50 சதவீதம் வாக்குகள், இந்தியா கூட்டணிக்கு 35 சதவீதம், மற்ற கட்சிகளுக்கு 15 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. பாஜகவுக்கு மட்டும் 42 சதவீதம் வாக்குகள் கிடைக்கும். இந்தியாவில் 18 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
மூக்கால் டைப்பிங்! வேற லெவல் டேலண்ட்! 3வது முறை கின்னஸ் உலக சாதனை படைத்த இந்தியர்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 34-38, பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணிக்கு 0-5, மற்ற கட்சிகளுக்கு 0-1 தொகுதிகளில் வெற்றி கிடைக்கலாம் எனத் தெரிவித்திருக்கிறது. தென்னிந்தியாவில் உள்ள 129 தொகுதிகளில் பாஜக 34 தொகுதிகளிலும், காங்கிரஸ் 33 தொகுதிகளுல்ம வெல்லும் என்று ஜன் கீ பாத் எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு குறிப்பிட்டுள்ளது.
2024 மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவுடன் தேர்தல் தொடங்கியது. 44 நாள்களாக நீடித்த அடுத்தடுத்த கட்ட தேர்தல்களுக்குப் பின் இறுதி கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குபதிவு மாலை 6 மணியுடன் முடிந்தது.
மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுகின்றன. நாடு முழுவதும் எதிர்நோக்கி இருக்கும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.