மூக்கால் டைப்பிங்! வேற லெவல் டேலண்ட்! 3வது முறை கின்னஸ் உலக சாதனை படைத்த இந்தியர்!
கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வினோத் புதிய உலக சாதனை படைக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளது. "உங்கள் மூக்கால் எவ்வளவு விரைவாக தட்டச்சு செய்ய முடியும்?" என்ற கேப்ஷனுடன் பதிவிடப்பட்டுள்ள வீடியோவில், வினோத் தனது மூக்கால் கம்ப்யூட்டர் கீபோர்டில் ஆங்கில எழுத்துக்களை தட்டச்சு செய்வதை வீடியோவில் காணலாம்.
வினோத் குமார் சவுத்ரி என்ற இந்தியர் கம்ப்யூட்டர் கீபோர்டில் உள்ள எழுத்துக்களை மூக்கின் மூலம் வேகமாக தட்டச்சு செய்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். சொந்த சாதனையை தானே 3வது முறையாக முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தின் தகவல்படி, 44 வயதான வினோத் குமார் சவுத்ரி ஒவ்வொரு முறையும் தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார். முதலில் 2023 இல் 27.80 வினாடிகளில் டைப் செய்தார். அதே ஆண்டு தனது இரண்டாவது முயற்சியில், 26.73 வினாடிகளில் டைப் செய்து சாதித்தார். இந்த முறை வெறும் 25.66 வினாடிகளில் அனைத்து எழுத்துகளையும் மூக்கால் தட்டச்சு செய்து சாதனையை படைத்துள்ளார்.
கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வினோத் புதிய உலக சாதனை படைக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளது. "உங்கள் மூக்கால் எவ்வளவு விரைவாக தட்டச்சு செய்ய முடியும்?" என்ற கேப்ஷனுடன் பதிவிடப்பட்டுள்ள வீடியோவில், வினோத் தனது மூக்கால் கம்ப்யூட்டர் கீபோர்டில் ஆங்கில எழுத்துக்களை தட்டச்சு செய்வதை வீடியோவில் காணலாம்.
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து பிரதமர்! தேர்தல் பிரச்சாத்திற்கு ஆடம்பர பேக்!
இந்த உலக சாதனைக்காக வினோத், QWERTY கீபோர்டில் ஆங்கில எழுத்துக்களை கேபிட்டலில் தட்டச்சு செய்ய வேண்டும். ஒவ்வொரு எழுத்துக்கும் இடையில் ஒரு ஸ்பேஸையும் டைப் செய்ய வேண்டும்!
மூக்கால் டைப் செய்து அசத்தும் வினோத், "இந்தியாவின் தட்டச்சு மனிதர்" என்று பெயர் பெற்றுள்ளார். மூக்கால் தட்டச்சு செய்வதைத் தவிர, எழுத்துக்களை ஒற்றைக் கையால் பின்னோக்கி தட்டச்சு செய்வது (5.36 வினாடி), கீபோர்டை முதுகுக்குப் பின்னால் வைத்து தட்டச்சு செய்வது (6.78 வினாடி) போன்ற சாதனைகளையும் படைத்துள்ளார்.
"எனது தொழில் தட்டச்சு செய்வதுதான். அதனால்தான் அதில் கின்னஸ் உலக சாதனையை பதிவு செய்ய நினைத்தேன்" என வினோத் கூறுகிறார். "வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், இந்த ஆர்வத்தை மட்டும் எப்போதும் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்" எனவும் அவர் சொல்கிறார்.
நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு! அதிபர் ஜோ பிடன் வரவேற்பு!