கொல்கத்தா - மாஜர்ஹாத் மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் - 5 பேர் உயிர் இழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு இதே போல் கொல்கத்தாவில் கிரீசு பூங்காவில் கிரிஷ் பூங்காவில் இருந்து ஹவுரா பகுதியை இணைக்கும் வகையில் 2.2 கி.மீட்டர் தொலைவிற்கு விவேகானந்தா மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் 2008இல் கோரப்பட்டு 2009இல் பணி துவங்கியது. இதனை கட்டி முடிக்க ஐதராபாத்தைத் தலைமையகமாகக் கொண்ட ஐவிஆர்சிஎல் நிறுவனத்திற்கு பணியாணை வழங்கப்பட்டது. 

2010ஆம் ஆண்டில் முடிந்திருக்க வேண்டிய இப்பணி பலமுறை முடிவுநாட்களை தள்ளிப்போட்டு முடிவுறா நிலையில் இருந்தது. மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த ஒப்பந்த நிறுவனத்துக்கு கொல்கத்தா பெருநகர மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டது. 

இதனால் விபத்து நிகழ்வதற்கு முன்னதாக பணிகள் வேகமாக நடைபெற்று வந்த நிலையில்  திடீர் என புரா பஜார் பகுதியில் சுமார் 250 மீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் இடிந்து விழுந்தது. 
அந்த நேரத்தில் பாலத்தின் கீழே, பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் நடைப்பயணிகளும் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் மேம்பால இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்ததோடு, 75 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், தற்போது கொல்கத்தாவின் டைமன் ஹார்பர் என்ற சாலையில் தீடிரென பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். .இடிபாடுகளில் சிக்கியவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டகும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்த விபத்தில் 17க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விபத்தில் சிக்கி உயிரிழந்த்வர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது கொல்கத்தாவில் நடந்த இரண்டாவது மேம்பால விபத்து என்பது குறிப்பிடத்தக்கது .