kiranbedi stopped by mla
தூய்மை திட்ட பணியில் ஈடுபட்ட துணை நிலை ஆளுனர் கிரண்பேடியை, காங்கிரஸ் எம்எல்ஏ தடுத்து நிறுத்தியதால், புதுவையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. இதையொட்டி, புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண்பேடி இன்று காலை தூய்மை பணிகளை மேற்கொள்ள புறப்பட்டார்.
துணை நிலை ஆளுனர் கிரண்பேடி மற்றும் சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பிச்சு வீரன்பெட் பகுதிக்கு சென்றனர். அங்கு தூய்மை பணிகளை மேற்கொண்டு இருந்தனர்.
அப்போது, அங்கு வந்த காங்கிரஸ் எம்எல்ஏ பாலன், தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தூய்மை பணிகளை செய்ய வேண்டாம் என கூறி, கிரண்பேடியை தடுத்து நிறுத்தினார். மேலும், தனது தொகுதியில் சுற்றுப்புற சுகாதாரம் சீராகவே உள்ளது. அதை பற்றி யாரும் கவலைப்பட வேண்டியது இல்லை.
எனவே, தூய்மை செய்யும் பணியை நிறுத்திவிட்டு, அனைவரும் கலைந்து செல்லும்படி கூறினார். இதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையொட்டி பரபரப்பு நிலவுகிறது.
தூய்மை இந்தியா திட்டத்தில் ஈடுபட்ட துணை நிலை ஆளுனர் ஈடுபட்டபோது, அவரை எம்எல்ஏ தடுத்து நிறுத்திய சம்பவம், புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
