மத்திய அமைச்சரவை மாற்றம்.. கிரண் ரிஜிஜுவுக்கு புதிய துறை ஒதுக்கீடு.. புதிய சட்ட அமைச்சர் யார் தெரியுமா?
கிரண் ரிஜிஜுவுக்கு பதிலாக அர்ஜுன் ராம் மேக்வால் புதிய சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிரண் ரிஜிஜு புவி அறிவியல் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டதால் புதிய மத்திய சட்ட அமைச்சராக அர்ஜுன் ராம் மேக்வால் நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசு தலைவர் மாளிகை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் "பிரதமரின் ஆலோசனையின்படி, மத்திய அமைச்சர்கள் குழுவில் உள்ள அமைச்சர்களிடையே இலாகாக்களை மறுஒதுக்கீடு செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு;வுக்கு புவி அறிவியல் அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கிரண் ரிஜிஜுவுக்குப் பதிலாக, அர்ஜுன் ராம் மேக்வால் புதிய சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மேக்வாலுக்கு இப்போது கலாச்சாரம், நாடாளுமன்ற விவகாரங்கள் மாநில அமைச்சராகவும் இருப்பார்.
இதையும் படிங்க : Siddaramaiah As New CM Of Karnataka: கர்நாடகா துணை முதல்வராவதை உறுதி செய்த டி.கே. சிவகுமார்!!
முன்னதாக நீதிபதிகளை நியமனம் செய்யும் நடைமுறை தொடர்பாக நிர்வாகத்துக்கும் நீதித்துறைக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து சமீபத்தில் ரிஜிஜு கடுமையாக விமர்சித்திருந்தார். நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பை விமர்சித்த அவர், இது காங்கிரஸ் கட்சியின் "தவறான" விளைவு என்று கூறியிருந்தார். அவரின் இந்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவரின் சட்டத்துறை இலாகா மாற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 10,11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.. மதிப்பெண்களை எப்படி தெரிந்துகொள்வது?