Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவில் தேடப்படும் காலிஸ்தான் பயங்கரவாதி லக்பீர் சிங் ரோட் பாகிஸ்தானில் உயிரிழப்பு.. யார் இவர்?

இந்தியாவில் தேடப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி லக்பீர் சிங் ரோட் பாகிஸ்தானில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

Khalistani terrorist Lakhbir Singh Rode, dies in Pakistan who is he Rya
Author
First Published Dec 6, 2023, 8:47 AM IST

இந்தியாவில் தேடப்படும் காலிஸ்தான் பயங்கரவாதி லக்பீர் சிங் ரோட் பாகிஸ்தானில் மாரடைப்பால் உயிரிழந்ததாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவருக்கு வயது 72. லக்பீர் சிங்கின் இறுதிச் சடங்குகள் சீக்கிய பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைப் பின்பற்றி பாகிஸ்தானில் ரகசியமாகச் செய்யப்பட்டதாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.. 

யார் இந்த லக்பீர் சிங் ரோட்?

தடை செய்யப்பட்ட அமைப்பான சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு (ISYF) தலைவராக இருந்த லக்பீர் ரோட், அரசாங்கத்தால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். 1985 ஆம் ஆண்டு ஏர் இந்தியா ஜெட் கனிஷ்கா மீது குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் லக்பீர் சிங் ரோட்,  1984 ஆம் ஆண்டு அமிர்தசரஸ் பொற்கோவிலில் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேவின் மருமகன் தான் இந்த லக்பீர் சிங் ரோட்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் உள்ள ரோட் கிராமத்தைச் சேர்ந்த லக்பீர் சிங் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் மரணத்திற்குப் பிறகு துபாய்க்குச் சென்றார், பின்னர் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தார். இவரின் குடும்பம் தற்போது கனடாவில் வசித்து வருகிறது.

லக்பீர் சிங் ரோட், தடை செய்யப்பட்ட அமைப்புகளான காலிஸ்தான் விடுதலைப் படை (KLF) மற்றும் சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு (ISYF) ஆகியவற்றின் தலைவர். இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் ரோட் நெருக்கமாக பணியாற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2001 இல் லக்பீர் சிங் ரோட்டின் ISYF அமைப்பை இங்கிலாந்து தடை செய்த நிலையில், ஒரு வருடம் கழித்து அமெரிக்கா தடை செய்தது. இங்கிலாந்தில் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த அமைப்பு தனது பெயரை சீக்கிய கூட்டமைப்பு-யுகே (SFU) என மாற்றியது.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் உத்தரவின் பேரில் லக்பீர் சிங் ரோட் பஞ்சாபில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அக்டோபர் மாதத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய சோதனையைத் தொடர்ந்து அவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

26/11 மும்பை தாக்குதல் குற்றவாளி சஜித் மிர் கவலைக்கிடம்! பாக். சிறையில் விஷம் வைத்துக் கொல்ல முயற்சி!

பஞ்சாப்பில் நடந்த பல குண்டுவெடிப்பு சம்பவங்கள், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போதைப்பொருள் மற்றும் வெடிபொருட்களைக் கடத்தியது என அவர் அவர் மீது தேசிய பாதுகாப்பு முகமை பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. த்தின் முக்கிய பிரமுகர்களை கொல்லும் சதித்திட்டத்திலும் அவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.. 2021 இல் பஞ்சாபின் ஃபசில்காவில் டிபன் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios