இதுதான் கேரளா…105 ஆண்டுகளுக்கு முன்பே மாணவிகளுக்கு மாதவிலக்கு விடுமுறை... முற்போக்கு சிந்தனையுடன் விளங்கிய பள்ளிக்கூடம்

பெண்களின் உடல் சார்ந்த விஷயமான மாதவிலக்கு நேரத்தில் விடுமுறை அளிக்கலாமா?  என்பது இன்று விவாதத்துக்கு உரிய பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில், 105 ஆண்டுகளுக்கு முன்பே கேரளாவில் ஒரு பள்ளிக்கூடம் மாணவிகளுக்கும், பெண்களுக்கும் மாதவிலக்கு நேரத்தில் விடுமுறை வழங்கி முற்போக்கு சிந்தனையுடன் விளங்கியுள்ளது என்றால் நம்பமுடிகிறதா!.

கொச்சியின் புறநகர் பகுதியில், எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளதிருபுனித்துரா நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கூடமே இந்த பாராட்டத் தகுந்த செயலை நூற்றூண்டுகளுக்கு முன்பே செய்துள்ளது.

மாதவிலக்கு நேரத்தில் பெண்களும், மாணவிகளும் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம், தேர்வுநேரத்தில் கூட மாதவிலக்கு ஏற்பட்டால், அன்று விடுமுறை எடுத்துவிட்டு, அடுத்து ஏதாவது ஒருநாளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

 ‘19-ம் நூற்றாண்டில் கேரளா’ என்ற புத்கத்தை வரலாற்று ஆய்வாளர் பி. பாஸ்கரஉண்ணி என்பவர் எழுதியுள்ளார்.  1988ம் ஆண்டு, கேரள அ ரசின் சாகித்யஅகாதெமி சார்பில் இந்த புத்தகம்  வௌியிடப்பட்டது. 19ம் நூற்றாண்டிலும்,20 நூற்றாண்டின் தொடக்கத்திலும் தென் மாநில மக்களின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், சாதிய முறை, சமூக அமைப்பு, குடும்பஅமைப்பு, கல்வி, வேளாண் முறை, கோயில்கள், நிர்வாகம் எவ்வாறு இருந்தது என்பதை அறிய இந்த புத்தகம் இன்னும் திறவுகோலாக இருந்து வருகிறது.

திருபுனித்துரா அரசு மகளிர் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் அந்த நேரத்தில் கல்வி அதிகாரிகளுடன் பேசி, பெண் ஆசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் மாதவிலக்கு நேரத்தில் விடுமுறை அளிக்க வேண்டுகோள் விடுத்து, அதை பெற்றுக் கொடுத்துள்ளார்.

கடந்த 1912ம் ஆண்டு ஜனவரி 19-ந்தேதி பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் வி.பி.விஸ்வநாத ஐயர், பள்ளியின் ஆய்வாளரிடம் பெண்களின் உடல் சார்ந்த பிரச்சினைகளையும், மாறுபாடுகளையும் எடுத்துக்கூறி விடுமுறையை பெற்றுக்கொடுத்தார். 19-ந்தேதி விடுக்கப்பட்ட கோரிக்கை அடுத்த 5 நாட்களில் 24ந்தேதி நடைமுறைக்கு வந்தது.

இந்த நடைமுறை இருந்த காலத்தில், மாணவர்கள் பள்ளிக்கு ஆண்டுக்கு 300 நாட்கள் கட்டாயம் வருகை தர வேண்டும், அவ்வாறு இருந்தால் மட்டுமே இறுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகளுக்கு தேர்வுகள் கால இடைவெயில் ஒழுங்காக நத்தப்பட்டுள்ளது, தேர்வுகள் மாணவர்கள் எழுதுவது கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஆசிரியைகள், மாணவிகளும் மாதவிலக்கு நேரத்தில் உடல்ரீதியான பிரச்சினைகளை எதிர்கொண்டதால் அவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தனர். இதை கருத்தில் கொண்டு விடுமுறையை தானாக வழங்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், ஆண்டு இறுதித் தேர்வு அல்லது பருவத்தேர்வு நடந்து வரும்போது, மாணவிகளுக்க மாதவிலக்கு ஏற்பட்டால் அந்த நேரத்தில் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, வேறு ஒரு நாளில் மாணவிகளுக்கு தனியாக தேர்வு நடத்தப்பட்டுள்ளது என நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மிகவும் பாராட்டத் தகுந்த விஷயம், என்னவென்றால், சாதிய வேறுபாடு உச்சத்தில் இருந்த அந்த நேரத்தில் உயர்குடி வகுப்பைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர், அனைத்து தரப்பு மாணவிகளுக்காகவும் சென்று அதிகாரிகளிடம் விடுமுறைக்காக போராடியுள்ளார்.

இந்நிலையில், நூற்றாண்டுகளுக்கு முன்பே சமூகத்துக்கு எடுத்துக்காட்டாகதிருப்புனித்துரா பள்ளிக்கூடம் விளங்கி இருக்கிறது. இந்நிலையில், அரசு பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் விடுமுறை அளிக்கும் திட்டம் குறித்து கேரள சட்டப்பேரவை கூட்டத்தில் சமீபத்தில் பேசப்பட்டது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. கே.எஸ். சபரிநாதன், இந்த விஷயத்தை சட்டப்பேரவையில் எழுப்பினார். அப்போது பதில் அளித்த, முதல்வர் பினராயி விஜயன், “ பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் விடுமுறை அளிக்கும் முறை பரிசீலிக்கப்படும்’’ என உறுதியளித்தார்.

இதற்கு முன்பாகவே, கேரளாவில் உள்ள தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று, தங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் விடுமுறை அளித்து நவீன காலத்துக்கு முன்னுதாரணமாக விளங்கிவிட்டது. ஆனால், அதற்கு முன்பாக மும்பையில் உள்ள ஒரு நிறுவனம்தான் இந்த திட்டத்தை செயல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.