அயோத்தி ராமர் கோயிலுக்குச் ஓணவில் வழங்கும் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில்!
ஓணவில் மரத்தாலான பலகையில் இருபுறமும் ஓவியங்களைக் கொண்டிருக்கும். அனந்தசயனத்திலும் தசாவதாரம், ஸ்ரீராம பட்டாபிஷேகம் போன்ற பல்வேறு விஷயங்கள் ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோயில், ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ள அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பாரம்பரியம் மிக்க ஓணவில் ஒன்றை பரிசாக வழங்கவுள்ளது.
பத்மநாபசுவாமி கோயிலின் கிழக்கு வாசலில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சியில், கோயில் தந்திரி மற்றும் கோயில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் பிரதிநிதிகளிடம் ஓணவில்லை வழங்குவார்கள் என்று ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலின் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
ஓணவில் வழங்குவது ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் செய்யப்பட்டு வரும் மூன்னூறு ஆண்டுகள் பழமையான சம்பிரதாயம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டைகையை முன்னிட்டு, ஒரு பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பத்மநாப கோவிலில் ஓணவில் காணிக்கை செலுத்துகிறார்கள்.
அயோத்தி கோயிலுக்கு வந்த குழந்தை ராமர் சிலை! இன்று பகல் 12.45 மணிக்கு கருவறையில் நிறுவ ஏற்பாடு!
பத்மநாப சுவாமி கோயில் சார்பில் அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்படும் ஓணவில் கொச்சியில் இருந்து விமானம் மூலம் அயோத்திக்குக் கொண்டு செல்லப்படும். முன்னதாக, சன்னதி வளாகத்தில் வைக்கப்படும் ஓணவில்லை இன்று பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இந்த ஓணவில் மரத்தாலான பலகையில் இருபுறமும் ஓவியங்களைக் கொண்டிருக்கும். அனந்தசயனத்திலும் தசாவதாரம், ஸ்ரீராம பட்டாபிஷேகம் போன்ற பல்வேறு விஷயங்கள் ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும்.
ராமர் கோயிலில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான புனித சடங்குகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், அயோத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜனவரி 22 அன்று நடைபெற இருக்கும் முக்கிய நிகழ்விற்குத் தேவையான அனைத்து சடங்குகளும் ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஜனவரி 22ஆம் தேதி மதியம் 12:15 முதல் 12:45 மணிக்குள் கோவிலின் கருவறைக்குள் 5 வயது குழந்தை ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என்று ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலை: முதல்வர் ஜெகன் நாளை திறந்து வைக்கிறார்