அயோத்தி கோயிலுக்கு வந்த குழந்தை ராமர் சிலை! இன்று பகல் 12.45 மணிக்கு கருவறையில் நிறுவ ஏற்பாடு!

சிலை உள்ளே கொண்டுவரப்படும் முன் கருவறையில் சிறப்பு பூஜைகளும் நடந்தன. ராம் லல்லாவின் வெள்ளிச் சிலை ரோஜாக்கள் மற்றும் சாமந்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

Watch Ram Lalla Idol Reaches Ayodhya Temple Ahead Of Grand Ceremony sgb

ராம் லல்லா என்று அழைக்கப்படும் குழந்த ராமர் சிலை புதன்கிழமை மாலை அயோத்தி கோவிலை அடைந்தது. ஜனவரி 22ஆம் தேதி நடக்கவுள்ள கும்பாபிஷேக விழாவிற்கு முன்னதாக கருவறையில் நிறுவப்பட இருக்கும் சிலை கிரேன் மூலம் கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது.

மைசூரு சிற்பி அருண் யோகிராஜ் கருங்கல்லில் செதுக்கிய இந்தச் சிலை, சுமார் 150-200 கிலோ எடையுள்ளது. மாலையில் பிரம்மாண்ட ஊர்வலத்துடன் கோயிலுக்குக் கொண்டுவரப்பட்ட குழந்தை ராமர் சிலை லாரியில் இருந்து கிரேன் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள ஒரு படத்தில் கோயிலின் கருவறைக்குள் சிலை வைக்கப்பட்டுள்ளதையும் தொழிலாளர்கள் அதனைப் பார்த்துக்கொண்டிருந்ததையும் காணமுடிகிறது. சிலை உள்ளே கொண்டுவரப்படும் முன் கருவறையில் சிறப்பு பூஜைகளும் நடந்தன. ராம் லல்லாவின் வெள்ளிச் சிலை ரோஜாக்கள் மற்றும் சாமந்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ராம் லல்லா சிலை இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 12.45 மணியளவில் இந்தச் சிலை அயோத்தி ராமர் கோயிலின் கருவறையில் நிறுவப்படும் என்று தெரிகிறது.

திங்கட்கிழமை கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில், புதன்கிழமை முதல் முறையாக குழந்தை ராமர் சிலை கோவிலுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தசண் சிலையை புதிய ராமர் கோவில் வளாகத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நேற்று இரவு முதல் நடைபெற்றது. மாலையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட லாரியில் கிரேன் உதவியுடன் சிலை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.

ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோயில் திறப்பு நிகழ்வை முன்னிட்டு நடக்கும் சடங்குகளின் ஒரு பகுதியாக கலச பூஜையும் நடைபெற்றது.

மறைமலைநகர் அருகே 36 அடி உயரத்தில் ஐயப்பன் சிலை பிரதிஷ்டை! திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios