இந்திய கொடியை விட பெரிதாக வைக்கப்பட்ட பாகிஸ்தான் கொடி.. பரபரப்பை கிளப்பிய கேரளா லூலூ மால் - என்ன நடந்தது?
கொச்சியில் உள்ள ஷாப்பிங் மால்களில், லுலு மால் சமீபகாலமாக பெரும் புகழ் பெற்று வருகின்றது என்றால் அது மிகையல்ல. லுலு மாலின் கிளைகள் நாட்டின் பல நகரங்களில் விரிவடைந்துள்ளன, இந்நிலையில் கேரளாவின் கொச்சியில் உள்ள லுலு மால் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
உலகக் கோப்பை போட்டிக்காக லுலு மாலில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளின் கொடிகள் வைக்கப்பட்டுள்ள. ஆனால், லூலூ மாலில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை விட பாகிஸ்தான் கொடி பெரியதாக வைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கொடிகளுக்கு மேல் பாகிஸ்தானின் கொடி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். லூலூ மால், கொடி விதியை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தியக் கொடியை சிறியதாகவும், தாழ்வாகவும் வைத்து, பாகிஸ்தான் கொடியை ஏன் பெரிதாக, அதுவும் மேலே வைக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது கேரளா ஸ்டோரியின் அடுத்த பாகம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மூவர்ணக் கொடி அவமதிக்கப்பட்டதாக ஒருபுறம் குற்றச்சாட்டு எழுந்தாலும், எதிரி நாட்டுக் கொடியை பெரிய அளவில் வைத்து யாரையும் சமாதானப்படுத்துகிறார்களா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இந்த புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
விதிகளை மீறி இவ்வளவு பெரிய கொடியை ஏற்றியும், அதிகாரிகளும், போலீசாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் இன்னும் ஆச்சர்யமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இணையவாசிகள் பலர் கேரளாவின் நிலைமையை அறிய இந்த புகைப்படமே போதும் என கருத்து தெரிவித்துள்ளார்.
பெரும் ஆத்திரமும் விமர்சனமும் எழுந்ததால், கொச்சி லூலூ மால் அதிகாரிகள் கொடியை அகற்றியதாக செய்திகள் வந்தன. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.