உத்தரகாண்ட் செல்லும் பிரதமர் மோடி - 4200 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்!

Narendra Modi : வருகின்ற வியாழக்கிழமை அக்டோபர் 12ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உத்தரகாண்ட் செல்கிறார். அங்குள்ள பார்வதி குண்ட் என்ற இடத்தில் பூஜை மற்றும் தரிசனம் செய்ய உள்ளார் பிரதமர் மோடி அவர்கள். அதேபோல அங்குள்ள உள்ளூர் மக்களையும் சந்தித்து பேசவுள்ளார். 

PM Modi visiting Uttarakhand oct 12 laying foundation for several development projects worth Rs 4200 crore ans

ராணுவம், ITBP மற்றும் BRO பணியாளர்களுடன் இணைந்து உள்ளூர் மக்களுடன் உரையாட, குஞ்சி என்ற  கிராமத்திற்கு பிரதமர் மோடி அவர்கள் செல்கின்றார். மேலும் பித்தோராகரில் சுமார் ரூ.4200 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி நிரல் 

அக்டோபர் 12ம் தேதி காலை 8:30 மணியளவில், பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ஜொலிங்காங் சென்றடையும் பிரதமர், அங்கு பார்வதி குண்ட் பகுதியில் பூஜை மற்றும் தரிசனம் செய்வார். இந்த இடத்தில் புனிதமான ஆதி கைலாசத்திடம் பிரதமர் ஆசி பெறுகின்றார். இப்பகுதி அதன் ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் இயற்கை அழகுக்காக நன்கு அறியப்பட்டதாகும்.

அதனை தொடர்ந்து காலை 9:30 மணியளவில் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள குஞ்சி கிராமத்தை சென்றடையும் பிரதமர், அங்கு உள்ள உள்ளூர் மக்களுடன் உரையாடுகின்றார். மேலும் உள்ளூர் கலை மற்றும் தயாரிப்புகளை சிறப்பிக்கும் கண்காட்சியையும் பார்வையிடுகின்றார். ராணுவம், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் (ITBP) மற்றும் எல்லைச் சாலைகள் அமைப்பு (BRO) ஆகியவற்றின் பணியாளர்களுடனும் அவர் உரையாடுகின்றார். 

பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு: ஏமாற்றப்பட்டதாக உணரும் சாதிகள் - சுஷில் குமார் மோடி தாக்கு!

மேலும் நண்பகல் 12 மணியளவில், அல்மோரா மாவட்டத்தின் ஜாகேஷ்வர் நகருக்குச் செல்லும் பிரதமர், அங்கு ஜாகேஷ்வர் தாமில் பூஜை மற்றும் தரிசனம் செய்கின்றார். சுமார் 6200 அடி உயரத்தில் அமைந்துள்ள ஜாகேஷ்வர் தாம் சுமார் 224 கற்கோயில்களைக் கொண்டுள்ளது. அதன்பிறகு, மதியம் 2:30 மணியளவில் பித்தோராகரை சென்றடையும் பிரதமர், அங்கு கிராம மேம்பாடு, சாலை, மின்சாரம், நீர்ப்பாசனம், குடிநீர் போன்ற துறைகளில் சுமார் 4200 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகின்றார். நீர், தோட்டக்கலை, கல்வி, சுகாதாரம் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்றவை இதில் அடங்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PMGSY திட்டத்தின் கீழ் 76 கிராமப்புற சாலைகள் மற்றும் கிராமப்புறங்களில் கட்டப்பட்ட 25 பாலங்கள் உள்ளிட்டவை பிரதமரால் திறந்து வைக்கப்பட்டு, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். 9 மாவட்டங்களில் BDO அலுவலகங்களின் 15 கட்டிடங்கள்; மத்திய சாலை நிதியின் கீழ் கட்டப்பட்ட கௌசனி பாகேஷ்வர் சாலை, தாரி-தௌபா-கிரிசீனா சாலை மற்றும் நாகலா-கிச்சா சாலை ஆகிய மூன்று சாலைகள் மேன்படுத்தப்படும். 

அல்மோரா பெட்ஷால் - பனுவானுலா - தன்யா (NH 309B) மற்றும் தனக்பூர் - சல்தி (NH 125) ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் இரண்டு சாலைகளை மேம்படுத்துதல்; குடிநீர் தொடர்பான மூன்று திட்டங்கள், அதாவது 38 உந்தி குடிநீர் திட்டங்கள், 419 புவியீர்ப்பு அடிப்படையிலான நீர் வழங்கல் திட்டங்கள் மற்றும் மூன்று குழாய் கிணறுகள் அடிப்படையிலான நீர் வழங்கல் திட்டங்கள்; பித்தோராகரில் உள்ள தர்கோட் செயற்கை ஏரி; 132 KV பித்தோராகர்-லோஹாகாட் (சம்பாவத்) பவர் டிரான்ஸ்மிஷன் லைன்; உத்தரகாண்ட் முழுவதும் 39 பாலங்கள் மற்றும் உத்தரகண்ட் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (யுஎஸ்டிஎம்ஏ) கட்டிடம் டேராடூனில் உலக வங்கி நிதியுதவியுடன் உத்தரகாண்ட் பேரிடர் மீட்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது.

பிரதமரின் வருகையின்போது அடிக்கல் நாட்டப்படும் திட்டங்களில் 21,398 பாலி-ஹவுஸ் கட்டுவதற்கான திட்டமும் அடங்கும். இது பூக்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியை அதிகரிக்கவும், அவற்றின் தரத்தை மேம்படுத்தவும் உதவும். அதிக அடர்த்தி கொண்ட ஆப்பிள் பழத்தோட்டங்களை வளர்ப்பதற்கான திட்டம்; NH சாலை மேம்படுத்த ஐந்து திட்டங்கள்; பாலங்கள் கட்டுதல், டேராடூனில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை மேம்படுத்துதல்.

பலியனாலா, நைனிடால் ஆகிய இடங்களில் நிலச்சரிவைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும், சுகாதாரம் மற்றும் காடு தொடர்பான பிற உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்ற மாநிலங்களில் பேரிடர் தயார்நிலை மற்றும் பின்னடைவுக்கான பல படிகள்; மாநிலம் முழுவதும் 20 மாதிரி பட்டயக் கல்லூரிகளில் விடுதிகள் மற்றும் கணினி ஆய்வகங்கள் மேம்பாடு; சோமேஷ்வர், அல்மோராவில் 100 படுக்கைகள் கொண்ட துணை மாவட்ட மருத்துவமனை; 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை யூனிட்; நைனிடால் ஹல்த்வானி ஸ்டேடியத்தில் ஆஸ்ட்ரோடர்ஃப் ஹாக்கி மைதானம்; ருத்ராபூரில் உள்ள வெலோட்ரோம் ஸ்டேடியம்; ஜகேஷ்வர் தாம் (அல்மோரா), ஹாத் கலிகா (பித்தோராகர்) மற்றும் நைனா தேவி (நைனிடால்) கோயில்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான மனஸ்கந்த் மந்திர் மாலா மிஷன் திட்டம், உள்ளிட்டவை இதில் அடங்கும்.

சுதந்திர தின உரை.. அறிவிக்கப்பட்ட திட்டங்கள்.. எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளது - ஆய்வு செய்த பிரதமர் மோடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios