சுதந்திர தின உரை.. அறிவிக்கப்பட்ட திட்டங்கள்.. எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளது - ஆய்வு செய்த பிரதமர் மோடி!

நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது சுதந்திர தின உரையில் வெளியிட்ட அறிவிப்புகளின் அடிப்படையில் மக்களுக்கான நலதிட்டங்களின் முன்னேற்றத்தை குறித்து மதிப்பாய்வு செய்வதற்காக இன்று உரிய அதிகாரிகளை சந்தித்து பேசினார். 

PM modi reviewed on progress in schemes based on the announcements in his Independence Day speech ans

பெண்கள் மீது சிறப்பு கவனம் : நாடு முழுவதும் உள்ள இரண்டு கோடி பெண்களுக்கு திறன் பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது "Lakhpati Didi" என்ற திட்டம். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் முன்பு செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், இப்போது தேசிய அளவில் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் நாடு முழுவதும் 15,000 பெண்கள் சுயவுதலி குழுக்களுக்கு விவசாய பணிகளுக்காக Droneகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி அனுப்பிய “அந்த” ஆள்.. யார் இந்த சஞ்சீவ் குமார் சிங்லா.? இப்படியொரு மனிதரா..

Jan Aushadhi திட்டம் அதாவது சிறப்பு விற்பனை நிலையங்கள் மூலம் அனைவருக்கும், குறிப்பாக ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை கிடைக்கச் செய்யும் ஒரு செயலாகும். ஏற்கனவே நாடு முழுவதும் சுமார் 10,000 Jan Aushadhi நிலையங்கள் உள்ள நிலையில், அவற்றை 25,000 நிலையங்களாக கூட்ட ஆவணம் செய்யப்பட்டு வருகின்றது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தனது சுதந்திர தின உரையில், விவசாயம் மற்றும் அது தொடர்பான நோக்கங்களுக்காக 15,000 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ட்ரோன்களை அளிப்பது பற்றி பிரதமர் பேசினார். பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி அளிப்பது முதல் செயல்பாட்டை கண்காணிப்பது வரை இதை செயல்படுத்துவதற்கான திட்டங்களின் மேலோட்டம் பிரதமருக்கு வழங்கப்பட்டது.

அதே போல மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதை அதிகரிக்க, இந்தியாவில் ஜன் ஔஷதி கடைகளின் எண்ணிக்கையை தற்போது 10,000 இலிருந்து 25,000 ஆக உயர்த்துவது குறித்தும் பிரதமர் பேசியிருந்தார். இந்த விரிவாக்கத்திற்கான செயல்படுத்தல் உத்தியை பிரதமர் ஆய்வு செய்தார்.

ஸ்குவாஷ், கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்தியா தங்கம் வென்றது – பதக்கம் வென்ற வீரர்களுடன் மோடி உரையாடல்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios