திடீர் எரிவாயு கசிவு.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!
Punjab : பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள அவதார் நகர் குடியிருப்பு காலனியில் எரிவாயு கசிவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிருடன் எரிந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர் பாஜக கட்சியின் தொண்டர் என கூறப்படுகிறது. உயிரிழந்த பாஜக தொண்டர் யஷ்பால் காய் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். காயை தவிர, அவரது மருமகள் ருச்சி மற்றும் மூன்று சிறுமிகள் இந்த சோகமான விபத்தில் இறந்தவர்களில் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவில் எரிவாயு கசிந்ததால், அதனால் குளிர்சாதன பெட்டியின் கம்ப்ரசர் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வெடிவிபத்தால் அந்த வீடு தீப்பிடித்து எரிந்ததால், உள்ளே இருந்த குடும்பத்தினர் வெளியே வர வாய்ப்பில்லாமல் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யஷ்பால், அவதார் நகரிலேயே ஹார்டுவேர் வியாபாரம் செய்து வந்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
அமர்த்தியா சென் காலமானார்? மகள் மறுப்பு!
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பாஜக தலைவர் அசோக் சரீன் ஹிக்கி, இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். வீட்டில் இருந்த குடும்பத்தினர் அனைவரும் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்ததாக ஆய்வில் இருந்து தெரியவந்ததாக அசோக் கூறினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
வீட்டில் இருந்த எல்பிஜி சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதால் விபத்து ஏற்பட்டதாக அசோக் கூறினார். முதலில் கேஸ் சிலிண்டர் கசிந்ததாகவும், பின்னர் குளிர்சாதன பெட்டியில் தீப்பொறி ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக கம்ப்ரசர் வெடித்ததாகவும் அவர் கூறினார். குளிர்சாதனப் பெட்டியின் கம்ப்ரஸர் வெடித்துச் சிதறியதில் பெரும் வெடிப்பு ஏற்பட்டதால் தீ வேகமாக வீடு முழுவதும் பரவியுள்ளது என்றார் அவர்.
தீ வீடு முழுவதும் மல மல என பரவிய நிலையில் யாராலும் வீட்டை விட்டு தப்பிக்க முடியவில்லை என்றும், இந்த நிகழ்வில் யஷ்பால் அவர்களின் மகன் இந்திரபால் அவர்களும் படுகாயம் அடைந்து, தற்பொழுது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அவர் கூறினார்.
வெறும் ரூ.450க்கு கிடைக்கும் எல்பிஜி கேஸ் சிலிண்டர்.. எப்படி பெற வேண்டும் தெரியுமா..