Asianet News TamilAsianet News Tamil

அமர்த்தியா சென் காலமானார்? மகள் மறுப்பு!

நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் காலமானதாக வெளியான தகவலை அவரது மகள் நந்தனா தேப் சென் மறுத்துள்ளார்

Nobel Laureate and Indian Economist Amartya Sen passed away smp
Author
First Published Oct 10, 2023, 5:25 PM IST | Last Updated Oct 10, 2023, 6:11 PM IST

நோபல் பரிசு பெற்றவரும், இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார அறிஞருமான அமர்த்தியா சென் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு வயது 89. அவரது மறைவு செய்தியை நடப்பு ஆண்டுக்கான பொருளாதார அறிவியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள அமெரிக்க பேராசிரியை கிளாடியா கோல்டின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால்,  அந்த கணக்கு போலியானது என தெரியவந்துள்ளது.

இருப்பினும், அமர்த்தியா சென் குடும்பத்தினரிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், அமர்த்தியா சென் காலமானதாக வெளியான தகவலுக்கு அவரது மகள் நந்தனா தேப் சென் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த தகவலை பிடிஐ செய்தி நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

பொருளாதாரம், சமூக தத்துவம் மற்றும் பொதுநலப் பொருளாதாரம் ஆகியவற்றில் தனது விரிவான பங்களிப்புகளுக்காக அறியப்பட்டவர் அமர்த்தியா சென். 1933ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி மேற்குவங்க மாநிலம் சாந்திநிகேதனில் பிறந்த அமர்த்தியா சென், மதிப்புமிக்க உலக பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

தற்போது தாமஸ் டபிள்யூ. லாமண்ட் பல்கலைக்கழகப் பேராசிரியராகவும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் தத்துவப் பேராசிரியராகவும் உள்ளார். இதற்கு முன்பு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டிரினிட்டி கல்லூரியின் மாஸ்டர் ஆக பணியாற்றியுள்ளார்.

அமர்த்தியா சென்னுக்கு பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவு பரிசு 1998 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. மேலும், பொதுநல பொருளாதாரத்திற்கான அவரது பங்களிப்பிற்காக 1999ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது. அதேபோல், ஜெர்மன் பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கம் அவருக்கு ஜெர்மன் புத்தக வர்த்தகத்தின் 2020 அமைதிப் பரிசை வழங்கியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios