Asianet News TamilAsianet News Tamil

கேரளாவில் டியூஷன் சென்ற 6 வயது சிறுமியைக் கடத்திச் சென்ற கும்பல்!

கொல்லத்தில் டியூஷனுக்குச் சென்ற ஆறு வயது சிறுமியை சிலர் கடத்திச் சென்றனர். கடத்திய கும்பலில் மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்ததாகப் போலீசார் கூறுகின்றனர்.

Kerala 6-year-old girl kidnapped by a gang while going to tuition in Kollam sgb
Author
First Published Nov 27, 2023, 11:17 PM IST | Last Updated Nov 27, 2023, 11:53 PM IST

கேரள மாநிலம் கொல்லத்தில் டியூஷனுக்குச் சென்ற ஆறு வயது சிறுமியைச் சிலர் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்டிருக்கும் போயிருக்கும் சிறுமி ஆயூரைச் சேர்ந்த ரெஜி என்பவரின் மகள் அபிகாயில் சாரா ரெஜி என்று போலீசார் கூறுகின்றனர்.

காவல்துறையில் அளித்த புகாரின்படி, சிறுமியை கடத்தியவர்கள் வெள்ளை நிற ஹோண்டா அமேஸ் காரில் வந்தனர். திங்கட்கிழமை மாலை சிறுமி தனது மூத்த சகோதரன் ஜோனத்தனுடன் டியூஷனுக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து பூயப்பள்ளி போலீசார் விசாரணையைத் துவக்கியுள்ளனர்.

காரில் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட நான்கு பேர் இருந்ததாக சிறுமியின் அண்ணன் ஜோனத்தன் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். காரில் இருந்தவர்கள் தாயிடம் கொடுக்கச் சொல்லி தன்னிடம் ஒரு பேப்பரைத் தந்துவிட்டு, சகோதரியைக் கடத்திச் செல்ல முயன்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

சென்னையில் 93,000 தெரு நாய்களுக்கு தடுப்பூசி! தினமும் 910 தடுப்பூசி போட 7 மருத்துவக் குழுக்கள்!

Kerala 6-year-old girl kidnapped by a gang while going to tuition in Kollam sgb

ஜோனத்தன் கடத்தல்காரர்களைத் தடுக்க முயன்றபோது ​​கார் நகர ஆரம்பித்து கீழே விழுந்திருக்கிறார். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தச் சம்பவத்தின் வீடியோவை போலீசார் கைப்பற்றியுள்ளனர். ஆனால், வீடியோவில் காரின் நம்பர் பிளேட்டில் உள்ள எண் தெளிவாக இல்லை. ஆனால், கார் திருவனந்தபுரத்தில் பதிவு செய்யப்பட்டது என்பது தெளிவாகியுள்ளது. ஆனால், அந்த காரின் நம்பர் போலியானதாகவும் இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

பின்னர், கடத்தல் கும்பல் குழந்தையின் தாயை அழைத்து சிறுமியை விடுவிக்க ரூ.5 லட்சம் கேட்டுள்ளனர். கொல்லம் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் போலீசார் சோதனை நடத்துகின்றனர். ஆரியங்காவு செக்போஸ்ட் பகுதியிலும் விசாரணை நடத்தப்படுகிறது.

சிறுமியைப் பற்றிய தகவல் கிடைத்தால் உடனடியாக உறவினர்களுக்குத் தெரிவிக்கலாம் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தையும் தொடர்புகொள்ளலாம் என்று கிராமப் பஞ்சாயத்து உறுப்பிடர் அறிவித்துள்ளார். அறிவிக்கப்பட்டுள்ள எண்கள்: 9946923282, 9495578999

வாட்ஸ்அப்பில் தீடீர்னு காணாமல் போன வசதி திரும்ப வந்துருச்சு... பிரைவசிக்கு இன்னொரு கேரண்டி!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios