kcr speech today : நலத்திட்டங்களை இலவசங்கள் என கொச்சைப்படுத்துவது வேதனை: பாஜகவை கிழித்த தெலங்கானா முதல்வர்
மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்டங்களை இலவசங்கள் என்று கொச்சைப்படுத்துவது வேதனையாக இருக்கிறது என்று தெலங்கானா முதல்வர் கேசி சந்திரசேகர் ராவ் பாஜகவை காட்டமாக விமர்சித்துள்ளார்.
மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்டங்களை இலவசங்கள் என்று கொச்சைப்படுத்துவது வேதனையாக இருக்கிறது என்று தெலங்கானா முதல்வர் கேசி சந்திரசேகர் ராவ் பாஜகவை காட்டமாக விமர்சித்துள்ளார்.
வரலாற்று சிறப்பு மிகுந்த கோல்கொண்டா கோட்டையில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திரனத்தைக் கொண்டாடினார். அந்தநிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இலவச கல்வி, மருத்துவம் ஏழ்மையை ஒழிக்கும்: தேர்தல் இலவசங்கள் அல்ல: மோடிக்கு கெஜ்ரிவால் பதில்
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பல்வேறு பொருட்கள் மீது புதிய வரி, பாலுக்கு வரி என புதிய வரிகளை விதித்து ஏழை, நடுத்தர மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றுகிறது.
மக்கள் நலன்கள்தான் ஒரு அரசின் பிரதான நோக்கமாகவும், பொறுப்பாகவும் இருக்க முடியும்.
எந்தவிதமான பொறுப்பும் இல்லாமல் இருக்கும் மத்திய அரசு, மக்கள் நலத்திட்டங்களை இலவசங்கள் என கொச்சைப்படுத்துவது பொறுப்பை தட்டிக்கழிப்பதாகும்.
தேசியக் கொடியை வீட்டில் ஏற்றியாச்சு! மத்திய அரசிடம் சான்றிதழ் வாங்கிட்டிங்களா?எப்படி பெறுவது?
தேசத்தின் கட்டமைப்பு கூட்டாட்சி தத்துவத்தில் அமைந்துள்ளது, கட்டமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, மாநில அரசுகளோடு இணைந்து வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும். ஆனால், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கூட்டாட்சி தத்துவத்தின் மதிப்புகளை மதிக்கவில்லை, மாநில அரசுகளை நிதிரீதியாக பலவீனமாக்குகிறது, அதிகாரத்தை குவித்து வைத்துள்ளது.
வரிவசூலிப்பதில் 41 சதவீதம் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. ஆனால், மறைமுகமாக செஸ் வரி விதித்து, மாநிலங்களின் வரி வருவாயைக் குறைத்துவிடுகிறது மத்திய அரசு. 2022-23ம் ஆண்டில் மாநிலங்களின் வரி வருவாய் 11.4 சதவீதம் குறைந்துள்ளது. மாநிலங்களுக்கு 41 சதவீதம் வருவாயைத் தரவேண்டிய மத்திய அரசு 29.6 சதவீதத்தைக் கொடுத்து அநீதி இழைக்கிறது.
அதோடுமட்டுமல்லாமல் மாநிலங்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமான நடவடிக்கை ஏதும் எடுக்கவிடாமல் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்தியஅரசு விதிக்கிறது. கூட்டுறவுகூட்டாட்சி குறித்து பேசும் மத்திய அ ரசு, அதிகாரத்தை குவித்து வைத்துள்ளது.
இனிமேல் போனை எடுத்தால் ஹலோ சொல்லக்கூடாது; வந்தே மாதரம் சொல்லணும்: மகாராஷ்டிரா அமைச்சர் உத்தரவு
மாநில அரசுகளை கலந்தாய்வு செய்து முடிவு எடுக்க வேண்டிய பல்வேறு விஷயங்களில் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்தது. குறிப்பாக வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து திரும்பப் பெற்றது. வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகளை தேசத்துரோகிகள் போல் சித்தரிக்க அரசு முயன்றது. இறுதியில் விவசாயிகளிடம் பிரதமர் மன்னிப்புக்கோரினார்
மத்தியில் ஆளும் பாஜக அரசு தன்னுடைய தோல்விகளை மறைக்க மக்களை பிரித்தாளுதல், வெறுப்பு அரசியலை பயன்படுத்துகிறது. அரசியலமைப்புப் பதவியில் இருப்பவர்கள், பாசிச தாக்குதலில் ஈடுபடுவது, இந்தியாவின் அமைதியைக் குலைக்கும்.
இவ்வாறு கேசிஆர் தெரிவித்தார்