kejriwal: freebies:இலவச கல்வி, மருத்துவம் ஏழ்மையை ஒழிக்கும்: தேர்தல் இலவசங்கள் அல்ல: மோடிக்கு கெஜ்ரிவால் பதில்

இலவச கல்வியும், மருத்துவமும் தேர்தல் இலவசங்கள் அல்ல. இந்த இரண்டும் சேர்ந்து ஒரு தலைமுறையில் நாட்டின் வறுமையை ஒழிக்க முடியும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

Free education and healthcare, not handouts, can end poverty, according to Kejriwal.

இலவச கல்வியும், மருத்துவமும் தேர்தல் இலவசங்கள் அல்ல. இந்த இரண்டும் சேர்ந்து ஒரு தலைமுறையில் நாட்டின் வறுமையை ஒழிக்க முடியும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

கடந்த மாதம் உ.பி.யில் பண்டேல்கந்த் எக்ஸ்பிரஸ் சாலை திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி “ இலவச கலாச்சாரம் நாட்டின் வளர்சிக்கு ஆபத்து. இதிலிருந்து அரசியல் கட்சிகள் வெளிவர வேண்டும்”எனத் தெரிவித்திருந்தார். அதற்கு மறைமுகமாக கெஜ்ரிவால்  பதில் அளித்துள்ளார்.

நாட்டின் 75வது சுதந்திரதினம் டெல்லியில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் நடந்த சுதந்திரதின விழாவில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேசியக் கொடி ஏற்றினார். அதன்பின் மக்களிடம் அவர் பேசியதாவது: 

Free education and healthcare, not handouts, can end poverty, according to Kejriwal.

சோனியா இல்லாமல் காங்கிரஸ் கொண்டாடிய சுதந்திர தினம்: ஒற்றுமை முக்கியம்- பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

உலகிலேயே நம்பர் ஒன் நாடாக இந்தியாவை மாற்ற, நாட்டின் 130 கோடி மக்கள் ஒன்று சேர்வது அவசியம். நாம் ஒன்றாக இணைந்தோம், ஆங்கிலேயர்களை நாட்டைவிட்டு விரட்டினோம். இன்று நாம் ஒன்றாகச்சேர்ந்தால், இந்தியாவை உலகின் முதல்நாடாக உயர்த்தலாம்.

சுதந்திரத்துக்குப்பின் பல நாடுகள் கல்வி, மருத்துவத்தில் கவனம் செலுத்தியுள்ளன, பணக்காரநாடாக மாறியுள்ளன. அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, டென்மார்க் நாடுகள் எவ்வாறு பணக்கார நாடுகளாக உள்ளன. தங்கள் நாட்டு மக்களுக்கு நல்ல கல்வி, தரமான மருத்துவவசதிகளை வழங்கினார்கள்.

இதேபோல செய்து இந்தியாவையும் நாம் நம்பர் ஒன் தேசமாக உயர்த்தலாம். ஒவ்வொரு இந்தியரும் தரமான கல்வி, மருத்துவ வசதி பெறும்போதுதான் மூவர்ணக் கொடி உயரத்தில் பறக்கும். இலவச கல்வி, மருத்துவம் ஆகியவை தேர்தல் இலவசங்கள் அல்ல. இவை இரண்டும் சேர்ந்து ஒரு தலைமுறையால் தேசத்தின் ஏழ்மையை விரட்டக்கூடியது. 

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு மிரட்டல்

Free education and healthcare, not handouts, can end poverty, according to Kejriwal.

கல்விமுறை, மருத்துவ வசதிகள் ஆம் ஆத்மி அரசு வந்தபின் சீரமைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் நாங்கள் ஆட்சிக்கு வரும் முன் அரசுப்பள்ளியில் மாணவர்கள் நிலை மோமசமாகவும், அடிப்படை வசதிகள் இன்றி இருந்தது.

ஆனால், இன்று நாங்கள் அரசுப் பள்ளிகளை உருவாக்கியுள்ளது, அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் வழக்கறிஞராக, மருத்துவராக வர முடியும். டெல்லி மக்களுக்கு தரமான மருத்துவ வசதியை ஏற்படுத்தியுள்ளோம். நபர் ஒருவருக்கு ரூ.2 ஆயிரம் மருத்துவக்காக அரசு ஒதுக்குகிறது.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை சுயநல அரசு சிறுமைப்படுத்துகிறது: சோனியா காந்தி கண்டனம்

இதேபோல 130கோடி இந்தியர்களுக்கும் 2.50லட்சம் கோடியில் நல்ல மருத்துவ வசதியை உருவாக்கலாம்.
 நம்தேசம் சுதந்திரம் அடைந்து 15 ஆண்டுகளுக்குப்பின்புதான் சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றது. 2ம் உலகப் போரில் ஜப்பான்அழிந்து, இப்போது நம்மைவிட முன்னேறி வருகிறது. நாமும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. இந்தியர்கள் உலகிலேயே சிறந்த புத்திசாலிகள், கடினமான உழைக்கும் மக்கள். ஆனாலும் பின்தங்கி இருக்கிறோம்

இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios