Vande Mataram: இனிமேல் போனை எடுத்தால் ஹலோ சொல்லக்கூடாது; வந்தே மாதரம் சொல்லணும்: மகாராஷ்டிரா அமைச்சர் உத்தரவு
மகாராஷ்டிராவில் உள்ள அரசு ஊழியர்கள், அதிகாரிகள் இனிமேல் மொபைல் போன், தொலைப்பேசியில்பேசும் போது ஹலோ என்ற வார்த்தைக்குப் பதிலாக வந்தே மாதரம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று மகாராஷ்டிரா அமைச்சர் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் உள்ள அரசு ஊழியர்கள், அதிகாரிகள் இனிமேல் மொபைல் போன், தொலைப்பேசியில்பேசும் போது ஹலோ என்ற வார்த்தைக்குப் பதிலாக வந்தே மாதரம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று மகாராஷ்டிரா அமைச்சர் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மகாராஷ்டிரா கலாச்சாரத்துறை அமைச்சர் சுதிர் முகன்திவார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை சுயநல அரசு சிறுமைப்படுத்துகிறது: சோனியா காந்தி கண்டனம்
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ்அகாதி ஆட்சி அகற்றப்பட்டு பாஜக தலைமையிலான ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஏக்நாத் ஷிண்டே இருந்து வருகிறார்.சமீபத்தில் ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, 18 பேர் புதியஅமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். இதில்கலாச்சார விவகாரத்துறை அமைச்சராக சுதிர் முகந்திவார் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட கலாச்சாரத்துறை அமைச்சர் சுதிர் முகந்திவார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ நாம் 76வது சுதந்திரதினத்துக்குள் நுழையப் போகிறோம், அம்ரித் மகோத்சவத்தை கொண்டாடப் போகிறோம். ஆதலால் இனிமேல் மகாரஷ்டிராவில் உள்ள அதிகாரிகள், அரசு ஊழியர்கள் செல்போனில், தொலைப்பேசியில் ஏதேனும் அழைப்புகள் வந்தால் எடுத்தவுடன் ஹலோ என்ற கூறக்கூடாது. அதற்குப் பதிலாக வந்தே மாதரம் என்று பேச வேண்டும்.
விரைவில் 5ஜி மொபைல் சேவை : பிரதமர் மோடி உறுதி
ஹலோ என்பது ஆங்கில வார்த்தை, அந்த வார்த்தையைக் கைவிடுவது முக்கியம். வந்தேமாதரம் என்பது வெறும்வார்த்தையல்ல. அது ஒவ்வொரு இந்தியரின் உணர்வு. ஆதலால், அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் தொலைப்பேசி, செல்போனில் அழைப்பு வந்தால், வந்தேமாதரம் என்று பேச வேண்டும், ஹலோ சொல்லக்கூடாது.
இதற்கான முறையான அரசாணை வரும 18ம் தேதி வெளியிடப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதிவரை வந்தேமாதரம் என்றுதான் செல்போன், தொலைப்பேசியில் பேச வேண்டும்
தாய்நாட்டின் சேவைக்காக இணைந்திருப்போம்: ராகுல் காந்தி சுதந்திரதின வாழ்த்து
இவ்வாறு முகந்திவார் தெரிவித்தார்