kashmir gun fight 2 terrorists killed

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த திங்களன்று அமர்நாத்துக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தீவிரவ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

டிரால் பகுதியில் உள்ள சதூரா வனப்பகுதியில் இந்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத்தொடங்கினர்.

இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இதில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்கிற விவரத்தை ராணுவத்தினர் வெளியிடவில்லை.

மேலும் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சதூரா வனத்திற்குள் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.