கையில் போலி ஆதார்.. இலவசமாக பேருந்தில் செல்ல புர்கா அணிந்த ஆண்.. வசமாக சிக்கியது எப்படி?
வீரபத்திரய்யா மாதப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருக்க, அவ்வழியே சென்றவர்கள் புர்கா அணிந்து கொண்டு ஒரு ஆண் அமர்ந்திருப்பதை கண்டு குழப்பம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தை போல கர்நாடகாவிலும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் "சக்தி யோஜனா" என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச பஸ் டிக்கெட் வழங்கும் திட்டம் கர்நாடகாவிலும் அமலில் உள்ளது.
இந்நிலையில் பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய, தன்னை பெண் போல காட்டிக்கொள்ளும் வகையில் புர்கா அணிந்து கொண்டு பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்த வீரபத்திரய்யா மாதப்பட்டி என்பவரை போலீசார் பிடித்துள்ளனர். இவரது கையில் ஒரு பெண்ணின் ஆதாரம் அட்டையின் நகல் ஒன்றும் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதையும் படியுங்கள் : தெலுங்கானாவில் பிரதமர் மோடி வருகையைப் புறக்கணித்த கேசிஆர்
சம்பவத்தன்று 58 வயதான வீரபத்திரய்யா மாதப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருக்க, அவ்வழியே சென்றவர்கள் புர்கா அணிந்து கொண்டு ஒரு ஆண் அமர்ந்திருப்பதை கண்டு குழப்பம் அடைந்துள்ளனர். வெகு நேரமாகியும் அவர் அங்கிருந்து புறப்படாமல் இருந்த நிலையில் சந்தேகம் கொண்ட பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அவர்கள் வந்து விசாரிக்கும் பொழுது, தான் பிச்சை எடுப்பதற்காக தான் புர்கா அணிந்து கொண்டு இருப்பதாக அவர் பொய் உரைத்துள்ளார். ஆனால் மக்கள் பலர் கூடி போலீசாருடன் இணைந்து அவரை விசாரித்தபொழுது அவரிடம் ஒரு பெண்ணின் ஆதார் நகல் இருப்பதும், பேருந்தில் பெண்களுக்கு இலவசம் என்பதால், இலவசமாக பேருந்தில் பயணிக்கத்தான் அவர் புர்கா அணிந்திருந்தார் என்றும் தெரிய வந்தது.
தற்பொழுது இந்த ஆசாமியை பிடித்த கர்நாடகா போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : கர்நாடக பட்ஜெட்டில் மேகதாது அணை பற்றி முக்கிய அறிவிப்பு!