கேரளாவைத் தொடர்ந்து பெங்களூருவிலும் கனமழை பெய்யும் என பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் கடந்த 2 வாரங்களாக தென் மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. மாநில முழுவதும் வெள்ளத்தால் சூழ்ந்தது. பல்வேறு இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 

வெள்ளத்தில் சிக்கி இதுவரை 370-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 11,000-க்கும் மேற்பட்டோர் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது மெல்ல மெல்ல நிலைமை சீரடைந்து வருகிறது. மறுபுறம் கர்நாடகா மாநிலம் குடகுவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 22 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உடைமைகளை இழந்த முகாம்களில் தங்கி உள்ளனர்.

இந்நிலையில் கேரளாவைத் தொடர்ந்து கர்நாடகாவில் மழை வெளுத்து வாங்க உள்ளது. பெங்களூருவில் செப்டம்பர் மாதம் வெள்ளம் ஏற்பட அதிக வாய்புள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும் கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் கர்நாடக அரசுக்கும், பெங்களூரு மாநகராட்சிக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.