Karnataka Elections 2023: ஒரே தொகுதியில் தம்பியையும் களம் இறங்கும் டி.கே. சிவகுமார்! ஏன் தெரியுமா?
டி.கே. சிவகுமார் போட்டியிடும் கனகபுரா தொகுதியில் அவரது தம்பி டி.கே. சுரேஷும் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது கட்சியினரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாட மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே. சிவகுமார் போட்டியிடுகிறார். ஆனால், இன்று அவரது தம்பியும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே. சுரேஷும் அதே தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவருமான டி.கே. சிவகுமார் கனகபுரா தொகுதியில் கடந்த திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். இன்று அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் அவரது மனுவை ஏற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையில் கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக இருக்கும் டி.கே. சிவகுமாரும் ஒருவர். காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என சில கருத்துக்கணிப்புகள் கூறும் நிலையில், அது உண்மையானால் முதல்வர் பதவிக்கு வருவதற்கும் வாய்ப்பு உள்ள தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.
Karnataka Elections 2023: இவர்தான் உங்க நட்சத்திர தலைவரா? காங்கிரஸை விளாசும் பாஜக
வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு
இந்தச் சூழ்நிலையில் அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பாதகமான தீர்ப்பு வெளியானால், அவர் தேர்தலில் போட்டியிட முடியாமல் போகவும் வேட்புமனு நிராகரிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாகவே, அவர் போட்டியிடும் தொகுதியில் தனது சகோதரர் டி.கே. சுரேஷையும் அவர் வேட்புமனு தாக்கல் செய்ய வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
2013 முதல் 2018 வரை சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றபோது, சிவகுமாரின் சொத்து மதிப்பு 589 கோடி ரூபாய் அதிகரித்ததை அடுத்து அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. சிவக்குமாரின் சொத்துக்களில் ரூ.74 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், அவரது 21 வயது மகளின் ரூ.150 கோடி சொத்துக்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கை விசாரித்த சிபிஐ கூறுகிறது.
ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சூரத் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
டி.கே. சிவகுமாரின் சொத்துகள்
கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவகுமார் கனகபுரா தொகுதியில் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அவரும் மலைக்க வைக்கும் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவரின் மொத்த அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.1,214 கோடி எனக் கூறப்படுகிறது.
டிகே சிவகுமாரின் மனைவி உஷா சிவகுமாரின் சொத்து மதிப்பு ரூ.153.3 கோடி என்றும் பிரிக்கப்படாத குடும்பத்தின் சொத்து ரூ.61 கோடி என்றும் கூறியுள்ளார். இத்துடன் தனக்கு ரூ.226 கோடி மதிப்பிலான கடன் உள்ளதாவும் பிரமாணப் பத்திரத்தில் சொல்லி இருக்கிறார்.
தனது குடும்பத்தின் வருமானம் விவசாயம், வாடகை மற்றும் பல்வேறு நிறுவனங்களில் செய்யும் வணிகம் மூலம் வருவதாகக் காட்டியுள்ளார். டி.கே.சிவகுமார் பெயரில் ரூ.244.93 கோடியும், அவரது மனைவி மற்றும் மகன் ஆகாஷ் பெயரில் முறையே ரூ.20.3 கோடியும், ரூ.12.99 கோடியும் கடன் இருக்கிறதாம்.
தேஜஸ்வி சூர்யாவை ஓரம் கட்டுகிறதா பாஜக? ஸ்டார் லிஸ்டில் இடம்பெறாதது ஏன்?