Karnataka Election 2023: யார் யாருக்கு எத்தனை சதவீதம் வாக்குகள்; கருத்துக் கணிப்பில் சுவராஸ்ய தகவல்!!

பாஜக 98 முதல் 107 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கருத்துக்கணிப்பு கூறும் நிலையில் வாக்கு சதவீத கணக்கீட்டில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கிறது. 

Karnataka Election 2023: Asianet News-Jan Ki Baat opinion poll on vote sharing

பாஜக 98 முதல் 107 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கருத்துக்கணிப்பு கூறும் நிலையில் வாக்கு சதவீத கணக்கீட்டில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கிறது. 2018 கர்நாடக தேர்தல் கருத்துக்கணிப்பை துல்லியமாக கொடுத்த ஜன் கி பாத் தற்போது ஏசியாநெட் நியூஸுடன் இணைந்து கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. 2018 ஆம் ஆண்டு ஜன் கி பாத் நடத்திய கருத்துக்கணிப்பு துல்லியமாக இருந்த நிலையில் இம்முறையும் கர்நாடக தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு மூலம் பொதுமக்களின் மனநிலையை அறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு கர்நாடக தேர்தலில் பாஜக 36.5 சதவீத வாக்குகளை பெற்றது. அதாவது 104 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 38 சதவீத வாக்குகளை பெற்றது. அதாவது 80 இடங்களை கைப்பற்றியது. அதேபோல் ஜேடிஎஸ் 18 சதவீத வாக்குகளை பெற்றது.

இதையும் படிங்க: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் 2023: எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? வெளியானது கருத்துக்கணிப்பு முடிவுகள்!!

அதாவது 37 இடங்களை கைப்பற்றியது. மேற்குறிப்பிட்டுள்ள 2018 ஆம் ஆண்டு கர்நாடகா தேர்தல் கருத்துக்கணிப்புகள் துல்லியமாக இருந்த நிலையில் தற்போது நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகளை அதனுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தற்போதைய கர்நாடகா தேர்தலில் பாஜக 37 முதல் 39 சதவீத வாக்குகளை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 98 முதல் 109 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் காங்கிரஸ் 38 முதல் 40 சதவீத வாக்குகளை பெற்று 89 முதல் 97 இடங்களையும், ஜேடிஎஸ்  16 முதல் 18 சதவீத வாக்குகளை பெற்று 25 முதல் 29 இடங்களை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜக 98 முதல் 107 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று சர்வே கூறுகிறது.

இதையும் படிங்க: கர்நாடகா தேர்தல் 2023: ஜான் கி பாத் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு; யாருக்கு எவ்வளவு சீட்!!

ஆனால் வாக்கு சதவீத கணக்கீட்டில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பாஜக அரசின் இடஒதுக்கீடு ஒருசில வாக்குகளாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. லிங்காயத் சமூகத்தில் 70 சதவீதம் பேர் பாஜகவுக்கும், 20 சதவீதம் பேர் காங்கிரசுக்கும், 10 சதவீதம் பேர் ஜேடிஎஸ்ஸுக்கும் வாக்களித்துள்ளனர். வழக்கம் போல் காங்கிரசுக்கு 85 சதவீத முஸ்லிம்களும், பாஜகவுக்கு 5 சதவீதமும், ஜே.டி.எஸ்-க்கு 10 சதவீதமும் வாக்களித்துள்ளனர். இம்முறையும் ஒக்கலிகாவின் வாக்குகளை தக்கவைப்பதில் ஜேடி(எஸ்) வெற்றி பெற்றுள்ளது. ஒக்கலிகர்களில் 70 சதவீதம் பேர் ஜேடிஎஸ்-க்கும், 20 சதவீதம் பேர் பாஜகவுக்கும், 10 சதவீதம் பேர் காங்கிரசுக்கும் வாக்களிப்பார்கள் என கருத்துக்கணிப்பு கூறுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios