கர்நாடக அமைச்சரவை.. சித்தராமையா, சிவகுமார் எத்தனை அமைச்சர்களை தேர்வு செய்யலாம்..?

கர்நாடகாவில் சித்தராமையா, சிவக்குமார் ஆகியோர் தலா பத்து அமைச்சர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

Karnataka cabinet.. How many ministers can Siddaramaiah and Sivakumar choose..?

கர்நாடக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சித்தராமையா மற்றும் அவரது துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு தலா 10 பேரை அமைச்சர்களாக தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் அனுமதி அளித்துள்ளது. மீதமுள்ள அமைச்சர்களை காங்கிரஸ் தலைமை தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்று மதியம் 12.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் சித்தராமையா முதலமைச்சராகவும், டி.கே சிவகுமார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்க உள்ளனர்.

இவர்களுடன் 8 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளர். சித்தராமையா, டி.கே சிவகுமார் டெல்லியில் உயர்மட்ட தலைவர்களுடன் அமைச்சர்களின் இறுதி பட்டியல் குறித்து ஆலோசனை நடத்திய பிறகு பட்டியல் இறுதி செய்யப்பட்டது. கர்நாடக அமைச்சரவையில், 29 முதல் 30 அமைச்சர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க : 2000 ரூபாய் நோட்டு: சீறிய முதல்வர் ஸ்டாலின்.! திமுகவினரின் சாராய ஆலை விவகாரத்தை தூசி தட்டும் அண்ணாமலை

கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்ச்சி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் நிகழ்ச்சியாகவும் கருதப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், திரிணாமூல் காங்கிரஸ் எம்பி ககோலி கோஷ் தஸ்திதார் கலந்துகொள்வார் என்று தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லியின் அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கானாவின் கே சந்திரசேகர ராவ் மற்றும் ஆந்திர முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கலந்து கொள்கிறார். சத்தீஸ்கரின் பூபேஷ் பாகேல் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சுக்விந்தர் சிங் சுகு. இந்த விழாவில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, என்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் சிபிஐயின் டி ராஜா ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : சித்தராமையா அமைச்சரவையில் இடம்பெற உள்ள அமைச்சர்கள் யார் யார்? வெளியான உத்தேச பட்டியல்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios