சித்தராமையா அமைச்சரவையில் இடம்பெற உள்ள அமைச்சர்கள் யார் யார்? வெளியான உத்தேச பட்டியல்..

சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற உள்ள உத்தேச அமைச்சர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

Who are the ministers to be included in the Siddaramaiah cabinet? Released probable ministers list

கர்நாடகாவில் இன்று நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் சித்தராமையா முதலமைச்சராகவும், டி.கே சிவகுமார் துணை முதல்வராகவும் பதவியேற்க உள்ளனர். பெங்களூரு கண்டீரவா ஸ்டேடியத்தில் மதியம் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.  முன்னாள் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜோர்கிஹோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி மற்றும் ஜமீர் அகமது கான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

இதையும் படிங்க : ஜல்லிக்கட்டு போட்டியால் சாதிய மோதல்களுக்கான ஆபத்து.. எச்சரிக்கும் திருமாவளவன்.!

முன்னதாக சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்பு ரன்தீப் சுர்ஜேவாலாவுடன், அமைச்சரவை அமைப்பது தொடர்பாக டெல்லியில் தொடர் ஆலோசனைகளை நடத்தினர். மத்திய மற்றும் மாநில உயர்மட்டத் தலைவர்கள் அனைத்துப் பிரிவுகள், குழுக்கள், சமூகங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்த முயன்றதால், அமைச்சரவை மீதான விவாதங்கள் நேற்றிரவு வரை தொடர்ந்தன.

20 முதல் 25 அமைச்சர்கள் சனிக்கிழமை பதவியேற்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதன்படி, முன்னாள் துணை முதல்வர் ஜி பரமேஸ்வரா, லிங்காயத் தலைவர் எம்பி பாட்டீல், மூத்த காங்கிரஸ்காரரும், முன்னாள் அமைச்சருமான கேஜே ஜார்ஜ் உள்ளிட்ட சில முக்கிய பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதுதொடர்பாக காங்கிரஸ் அனுப்பிய கடிதமும் வெளியாகி உள்ளது.

Who are the ministers to be included in the Siddaramaiah cabinet? Released probable ministers list

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, முன்னாள் மத்திய அமைச்சர் கே.எச்.முனியப்பாவின் மகள் ரூபா ஷஷிதர், கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர காந்த்ரே, முன்னாள் அமைச்சர் தன்வீர் சைட், மூத்த தலைவர் கிருஷ்ண பைரே கவுடா, பி.கே. ஹரிபிரசாத் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது..

இதனிடையே புதிய அமைச்சரவையில் கர்நாடகாவின் அனைத்து பகுதிகள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர், பெண்கள், இளைஞர்கள் மற்றும் லிங்காயத்துகள் மற்றும் ஒக்கலிகா உள்ளிட்ட இரண்டு முக்கிய சமூகங்கள் பிரதிநிதித்துவம் இருக்கும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கர்நாடக அமைச்சரவையின் அனுமதிக்கப்பட்ட பலம் 34 ஆக இருப்பதால், அமைச்சர் பதவிக்கு ஏராளமானோர் ஆர்வமாக உள்ளனர். அதன்படி கர்நாடக மாநில அமைச்சர்களின் உத்தேச பட்டியலும் தயாராகி உள்ளது.

சித்தராமையா அமைச்சரவையில் இடம்பெற உள்ள உத்தேச அமைச்சர்கள் பட்டியல்:

  • எம் பி பாட்டீல்
  • டாக்டர். ஜி பரமேஸ்வரா
  • லக்ஷ்மன் சாவடி
  • ஈஷ்வர் காந்த்ரே
  • பி.கே ஹரிபிரசாத்
  •  ஜமீர் அகமது
  • யு டி காதர்
  • பிரியங்க் கார்கே
  • ராமலிங்க ரெட்டி
  • கே.ஜே ஜார்ஜ்
  • ஆர்.வி தேஷ்பாண்டே
  • எச்.கே பாட்டீல்
  • லக்ஷ்மி ஹெப்பல்கர்
  • தன்வீர் சைட்
  • கே.எச் முனியப்பா (தலித்)
  • ரூபா ஸ்ரீதர் (தலித்)
  • ஜெயச்சந்திரா
  • தினேஷ் குண்டு ராவ்
  • கிருஷ்ண பைரே கவுடா
  • எச்.சி மகாதேவப்பா
  • மது பங்கரப்பா

இதையும் படிங்க : எதிர்பார்த்தது போலவே நடந்துடிச்சு! மீண்டும் ரூ.1000 நோட்டுகள் அறிமுகமாகலாம்! பாஜக அரசை விளாசும் ப.சிதம்பரம்.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios