கர்நாடகா எக்சிட் போல் 2023ல் பாஜக, காங்கிரஸ், ஜேடி(எஸ்) ஆகியவற்றின் முழுமையான கருத்துக்கணிப்பு முடிவுகளை பார்க்கலாம்.
கர்நாடகா தேர்தல் லைவ் அப்டேட்: வெளியானது கருத்துக்கணிப்பு முடிவுகள் !!

கர்நாடக மாநிலத்தின் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
”வெற்றி உறுதி”.. கொண்டாட்டத்தில் காங்கிரஸ்.! 2வது இடம் யாருக்கு பாஜக Vs ஜேடிஎஸ்? எக்சிட் போல் முடிவு என்ன?
கர்நாடகாவில் அரியணை ஏறுவது யார்.? ஜன் கி பாத் - ஏசியாநெட்டின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு
கர்நாடகாவில் தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த எக்சிட் போலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி வருகிறது. ஜன் கி பாத் - ஏசியாநெட்டின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு பற்றி இங்கு காணலாம்.
கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? கருத்துக்கணிப்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் !!
கர்நாடகாவில் அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில் கர்நாடக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
ஜனநாயகக் கடமையைச் செய்த 100 வயது மூதாட்டி
கர்நாடக மாநிலம் எல்லப்பூரில் 100 வயதான மூதாட்டி சுப்பக்கா கோமாரா நேரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.
80 வயதைக் கடந்தவர்கள் விரும்பினால் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் வசதி இந்தத் தேர்தலில் முதல் முறையாக அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னும் 2 மணிநேரம் மட்டும்... இதுவரை வாக்குப்பதிவு நிலவரம் எப்படி?
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 9 மணி வரையான முதல் இரண்டு மணிநேரத்தில் 7.83 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குகளும் பகல் 1 மணி நிலவரப்படி 44.16 சதவீதம் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைய இன்னும் சுமார் 2 மணி நேரம் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 72.36 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
வாக்குப்பதிவுக்குப் பின் வெளியாகும் எக்ஸிட் போல் கணிப்புகள்
கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து, CVoter, Lokniti-CSDS, Axis My India மற்றும் Today's Chanakya உள்ளிட்ட பல ஏஜென்சிகள், தொலைக்காட்சி சேனல்களில் தங்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடக் காத்திருக்கின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் போட்டி நிலவுகிறது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன், நடைபெறும் தேர்தல் என்பதால் காங்கிரஸ் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் இத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் ஜேடி(எஸ்) ஆதரவாளர்கள் இடையே மோதல்
செவ்வாய்க்கிழமை இரவு மங்களூரு வடக்கு பகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் பி ஏ மொகிதீன் பாவாவின் ஆதரவாளர்கள் தங்களைத் தாக்கியதாக காங்கிரஸ் தொண்டர்கள் பாஜ்பே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதற்கு ஜேடிஎஸ் தரப்பிலும் எதிர்ப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலில் காயமடைந்த நிஜாம், ஹஷர் ஆகிய இரண்டு காங்கிரஸ் ஆதரவாளர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருமணம் முடிந்த கையோடு வாக்களிக்க வந்த தம்பதி
பெங்களூருவின் நெலமங்களாவில் டாக்டர் சின்மயி - மனோஜ்குமார் ஜோடி திருமணம் முடிந்த கையோடு வந்து வாக்களித்தனர்.
சிலிண்டரைப் பார்த்துவிட்டு ஓட்டு போடுங்கள்: டி.கே. சிவக்குமார் வேண்டுகோள்
"அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். தயவுசெய்து காஸ் சிலிண்டர்களைப் ஒரு முறை பார்த்துவிட்டு வாக்களிக்கவும். வாக்குச்சாவடிக்கு வெளியே ஒரு காஸ் சிலிண்டரை வைத்து அதற்கு மாலை அணிவிக்குமாறு எங்கள் கட்டியினரை அறிவுறுத்தியுள்ளேன்" என்று கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பாஜக அரசு தவறிவிட்டதாகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுவதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
எக்ஸிட் போல் கணிப்புகளே பாஜக வெற்றியை பிரதிபலிக்கும்: எடியூரப்பா உறுதி
கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா பாஜக தெளிவான பெரும்பான்மையைப் பெறும் என்றும் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளிலேயே அதைப் பார்க்க முடியும் என்றும் கூறியுள்ளார். சிவமோகா மாவட்டம் ஷிகாரிபுரா நகரில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனைத் தெரிவித்தார். அப்போது ஷிகாரிபுராவில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் எடியூரப்பாவின் மகன் பி.ஒய். விஜயேந்திராவும் உடன் இருந்தார்.
காங்கிரஸ் 60 சதவீதம் ஓட்டுகளைப் பெறும்: சித்தராமையா எதிர்பார்ப்பு
சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 60 சதவீத வாக்குகளைப் பெற்று 130 முதல் 160 இடங்களைக் கைப்பற்றும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கூறியுள்ளார். வருணாவில் வாக்களிக்கும் முன் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, மாநிலத்தில் காங்கிரஸ் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். "வாக்களிப்பதில் உற்சாகம் தெரிகிறது. பாராட்டுக்குரிய வகையில் வாக்குப்பதிவுக்கு அதிக அளவு மக்கள் வருகை தந்துகொண்டிருக்கின்றனர்" என்று அவர் கூறினார்.
ராம்நகரில் குமாரசாமி குடும்பத்துடன் வாக்குப்பதிவு
கர்நாடகாவில் ஜேடிஎஸ் தலைவர் ஹெச்.டி. குமாரசாமி ராம்நகரில் குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார். பிடாதி பேரூராட்சிக்கு உட்பட்ட கெட்டிகனஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு ஜூனியர் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் அவர் வாக்களித்தார். "குடும்பத்துடன் வந்து வாக்களித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். ஜனநாயகத்தை வெல்ல அனைவரும் சரியாக வாக்களிக்க வேண்டும்" என்று ஹெச்.டி. குமாரசாமி தெரிவித்தார்.
பெங்களூருவில் வாக்குப்பதிவு மந்தம்
பெங்களூருவில் காலை முதலே வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. நண்பகல் 1 மணி நிலவரப்படி 30 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதல்வர் சித்தராமையா வாக்குப்பதிவு
கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா மைசூரு மாவட்டம் சித்தராமனஹூண்டியில் வாக்களித்தார். சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஹொன்னாவரில் சுக்ரி கவுடா வாக்குப்பதிவு செய்தார்
பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர் சுக்ரி கவுடா ஹொன்னாவரில் வாக்கு செலுத்தினார். இவர் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக ஹொன்னாவர் சென்றிருந்தபோது, அவரை ஆசிர்வதித்தார். அந்த வீடியோ அப்போது வைரலானது.
வாக்குப்பதிவு நிலவரம் - 1 மணி வரை
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 1 மணி வரை 44.16 சதவீதம் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. முதல் ஆறு மணி நேரத்தில், கடலோர மாவட்டமான உடுப்பியில் அதிகபட்சமாக 47.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தலைநகர் பெங்களூரு மிகக் குறைந்த அளவே வாக்குகள் (29.41 சதவீதம்) பதிவு செய்யப்பட்டுள்ளன என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாக்கு செலுத்த வந்த 2 பேர் மரணம்
ஹாசன் மற்றும் பெல்காம் மாவட்டங்களில் வாக்களிக்க வந்த இரண்டு பேர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
Karnataka Elections: பெல்காம், ஹாசனில் வாக்களிக்க வந்த 2 பேர் மாரடைப்பால் மரணம்
மணக்கோலத்தில் வாக்குச்சாவடிக்கு வந்த ஜோடி
ஹவேரி மாவட்டம் ராணிபென்னுருவில் புதிதாகத் திருமணமான தம்பதிகள் மணக்கோலத்திலேயே வாக்குச்சாவடிக்குச் சென்று தங்கள் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர்.
உடுப்பியில் அதிகபட்ச வாக்குப்பதிவு
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் நான்கு மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலோர மாவட்டமான உடுப்பியில் 30.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மிகக் குறைவான வாக்குப்பதிவு சாமராஜநகர் மாவட்டத்தில் (16.77 சதவீதம்) பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் கிரிகெட் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் வாக்குப்பதிவு
கர்நாடகா சட்டசபை தேர்தலை முன்னிட்டு மைசூரில் இருக்கும் குவெம்பு நகரா பகுதியில் வாக்களிக்க வந்திருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜவகல் ஸ்ரீநாத்.