”வெற்றி உறுதி”.. கொண்டாட்டத்தில் காங்கிரஸ்.! 2வது இடம் யாருக்கு பாஜக Vs ஜேடிஎஸ்? எக்சிட் போல் முடிவு என்ன?

கர்நாடகா எக்சிட் போல் 2023ல் பாஜக, காங்கிரஸ், ஜேடி(எஸ்) ஆகியவற்றின் முழுமையான கருத்துக்கணிப்பு முடிவுகளை பார்க்கலாம்.

ABP-CVoter Karnataka Exit Poll 2023: Region-Wise Seat Projection Of BJP, Congress, JD(S)

கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. கர்நாடகாவில் பாஜக தற்போது 116 இடங்களுடன் தனிபெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வரும் நிலையில், அடுத்து யார் ஆட்சி என்ற வாக்காளர்களின் தீர்ப்பு வரும் 13 ஆம் தேதி தெரியும். வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

ABP-CVoter நடத்திய கர்நாடகா எக்சிட் போல் 2023ல் பாஜக, காங்கிரஸ், ஜேடி(எஸ்) ஆகியவற்றின் மாவட்ட வாரியான தொகுதிக் கணிப்பை பார்க்கலாம். கர்நாடகாவில் பெங்களூரு, மத்திய, கடலோர, ஹைதராபாத்-கர்நாடகா, மும்பை-கர்நாடகா மற்றும் தெற்கு கர்நாடகா அல்லது பழைய மைசூர் பகுதி ஆகிய ஆறு பிராந்தியங்களில் 224 தொகுதிகள் உள்ளன. மும்பை-கர்நாடகா மற்றும் தெற்கு கர்நாடகா மாநிலத்தின் மிகப்பெரிய பகுதிகள் மற்றும் முறையே 50 மற்றும் 51 சட்டமன்ற இடங்களைக் கொண்டுள்ளது.

ABP-CVoter Karnataka Exit Poll 2023: Region-Wise Seat Projection Of BJP, Congress, JD(S)

கிரேட்டர் பெங்களூரு பிராந்தியத்தின் எக்ஸிட் போல்:

ABP-CVoter கருத்துக் கணிப்புகளின்படி, கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி 10 கிலோமீட்டர் தொலைவில் மூன்று மணிநேர சாலைப் பயணத்தை நடத்திய கிரேட்டர் பெங்களூரு பகுதியில் பாஜக 15-19 இடங்களை வெல்லும். 45 சதவீத வாக்குகளைப் பெறும். காங்கிரஸ் 39 சதவீத வாக்குகளுடன் 11 முதல் 15 இடங்களைப் பெறும்.

பழைய மைசூர் பகுதியின் கருத்துக்கணிப்பு:

வொக்கலிகாக்களின் தளமான பழைய மைசூர் பகுதியில் மொத்தமுள்ள 55 இடங்களில் 28-32 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும். கருத்துக் கணிப்புகளின்படி, அது 38 சதவீத வாக்குகளைப் பெறும். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர். அதுவும் வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

JD(S) 19-23 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தைப் பிடிக்கும். முன்னாள் பிரதமரும், கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சருமான ஹெச்.டி.தேவேகவுடா இந்த சமூகத்தைச் சேர்ந்தவர். வொக்கலிகாக்கள் ஜேடி(எஸ்)க்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். பாஜக மீண்டும் இங்கு படுதோல்வி அடைய வாய்ப்புள்ளது. 0-4 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் ஒன்பது இடங்களில் வெற்றி பெற்றது.

மத்திய கர்நாடகா பகுதி கருத்துக்கணிப்பு:

மத்திய கர்நாடகா பகுதியில் காங்கிரஸ் 43.9 சதவீத வாக்குகளுடன் 18-22 இடங்களை கைப்பற்றும் என ஏபிபி-சிவோட்டர் கருத்துக்கணிப்பு கணித்துள்ளது. பாஜக 12-16 இடங்களில் வெற்றி பெற்று 39.2 சதவீத வாக்குகளைப் பெறும். 2018 தேர்தலில் மொத்தமுள்ள 35 தொகுதிகளில் 24 இடங்களில் பாஜக 43 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க..கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? கருத்துக்கணிப்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் !!

ABP-CVoter Karnataka Exit Poll 2023: Region-Wise Seat Projection Of BJP, Congress, JD(S)

கடலோர கர்நாடகா பகுதியின் கருத்துக்கணிப்பு:

21 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட கடலோர கர்நாடகா மாநிலத்தின் மிகச்சிறிய பகுதி. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 51 சதவீத வாக்குகளைப் பெற்று 18 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறை பாஜக 15-19 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 2-6 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத் - கர்நாடகா பகுதியின் கருத்துக்கணிப்பு:

கருத்துக்கணிப்பு ஹைதராபாத்-கர்நாடகா பிராந்தியத்தில் 11-15 இடங்களை பாஜக 37.5 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் இங்கு பாஜகவை வீழ்த்தி 43.6 சதவீத வாக்குகளுடன் 13-17 இடங்களைப் பெறக்கூடும். கடந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முறையே 12 மற்றும் 15 இடங்களைப் பெற்றன.

மும்பை - கர்நாடகா பகுதியின் கருத்துக்கணிப்பு:

ABP-CVoter கருத்துக்கணிப்பின்படி, மும்பை-கர்நாடகா பிராந்தியத்தில் காங்கிரஸ் 22-26 இடங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2018 இல் 17 இடங்களை வென்றது. மறுபுறம், 2018 இல் இந்த பிராந்தியத்தில் பாஜக 30 இடங்களைப் பெற்றுள்ளது. அதன் எண்ணிக்கையில் சரிவைக் காண வாய்ப்புள்ளது. பாஜக 43.4 சதவீத வாக்குகளுடன் 24-28 இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க..கர்நாடகாவில் அரியணை ஏறுவது யார்.? ஜன் கி பாத் - ஏசியாநெட்டின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios