கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? கருத்துக்கணிப்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் !!

கர்நாடகாவில் அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில் கர்நாடக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.

Karnataka exit polls result 2023: BJP vs congress vs JDS seat sharing

அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக இந்தாண்டு நடைபெறும் பல மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்கள் கருதப்படுகிறது. அதில் மிக முக்கியமானது கர்நாடகா சட்டமன்ற தேர்தல். 

தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால் இந்த தேர்தல் பாஜகவை பொறுத்தவரை மிகவும் முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது. ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பலத்த பாதுகாப்புடன்  நடைபெற்றது. இதில் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2.67 லட்சம் பேரும், பெண் வாக்காளர்கள் 2.64 லட்சம் பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 5ஆயிரம் பேரும் அடங்குவ‌ர்.

இந்த நிலையில் தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு,

Karnataka exit polls result 2023: BJP vs congress vs JDS seat sharing

ஜன் கி பாத் - ஏசியாநெட் கருத்துக்கணிப்பு:

ஜன் கி பாத் கருத்துக்கணிப்புகளின்படி, பாஜக 94 முதல் 117 இடங்களிலும், காங்கிரஸ் 91 முதல் 106 இடங்கள் வரையிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஜேடி(எஸ்) 14 முதல் 24 இடங்கள் வரை வெற்றி பெறலாம். பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என்று ஜன் கி பாத் - ஏசியாநெட் கணித்துள்ளது.

டிவி9 (TV9 Bharatvarsh-Polstrat):

பாஜக: 88-98 
காங்கிரஸ்: 99-109 
ஜேடிஎஸ் -  21-26
மற்றவை: 0-4

டிவி9 கருத்துக்கணிப்பு முடிவுகளில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

ஜீ நியூஸ் (Zee News):

வாக்கு சதவீதம்:
பாஜக - 36 சதவீதம்
காங்கிரஸ் - 41 சதவீதம்
ஜேடிஎஸ் - 17 சதவீதம்
இதையும் படிங்க: கர்நாடக தேர்தல்.. வாக்குப்பதிவு மையத்திலேயே குழந்தை பெற்றெடுத்த பெண்

தொகுதிப் பங்கீடு:
பாஜக - 79-94
காங்கிரஸ் - 103-118
ஜேடிஎஸ் - 25-33

நியூஸ் 18:

பாஜக  88 - 98

காங்கிரஸ் - 99 - 109 

ஜேடிஎஸ் -  21 - 26 

மற்றவர்கள் 04

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைய அதிக வாய்ப்பு உள்ளது என்று நியூஸ் 18ன் கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

Karnataka exit polls result 2023: BJP vs congress vs JDS seat sharing

காரவாலி கோஸ்டல் அமரரும் ஹில்ஸ் மண்டலம்:

வாக்கு சதவீதம்:

பாஜக  50

காங்கிரஸ் - 40

ஜேடிஎஸ் -  6

மற்றவர்கள் 4

ரிபப்ளிக் பி மார்க் (Republic p-Marq):
பாஜக  - 92
காங்கிரஸ் - 101
ஜேடிஎஸ் -  28
மற்றவர்கள் - 3
ரிபப்ளிக் பி மார்க் கருத்துக்கணிப்பில் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என்று தெரிய வந்துள்ளது.

நியூஸ் நேஷன்- சிஜிஎஸ் கணிப்புகள்:

பாஜக: 114 
காங்கிரஸ்: 86 
ஜேடிஎஸ் - 21 
மற்றவை: 3
நியூஸ் நேஷன்- சிஜிஎஸ் கணிப்பின்படி, கர்நாடகாவில் பாஜக அமோக வெற்றி பெரும் என்று தெரியவந்துள்ளது. 

டைம்ஸ் நவ்-ETG:
பாஜக: 85 
காங்கிரஸ்: 113
ஜேடிஎஸ் -  23
மற்றவை: 3

டைம்ஸ் நவ்வின் எக்சிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகளில் காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சியை அமைக்கும் என்று கூறியுள்ளது. கர்நாடகா எக்ஸிட் போல்கள் முடிவுகள் பெரும்பாலும் தொங்கு சட்டசபை வாய்ப்புள்ளது என்று தெரியவந்திருக்கிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios