கர்நாடக தேர்தல்.. வாக்குப்பதிவு மையத்திலேயே குழந்தை பெற்றெடுத்த பெண்..
பெல்லாரி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி வளாகத்தில் பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்தார்
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைய உள்ளது. காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். நிர்மலா சீதாராமன், பசவராஜ் பொம்மை, எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், டி.கே. சிவக்குமார் பிரகாஷ் ராக் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இந்த தேர்தலில் வாக்களித்தனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மதியம் 3 மணி நிலவரப்படி 52% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : ஆரியத்திற்கு அடியாள் வேலை பார்ப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா..? பதில் சொல்லுவாரா ஸ்டாலின்- சீறும் சீமான்
இந்த நிலையில், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி வளாகத்தில் பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்தார். வாக்குச் சாவடி எண் 228 மணிலா என்ற நிறைமாத கர்ப்பிணி தனது வாக்கை செலுத்த வந்திருந்தார். அப்போது, வாக்குச் சாவடியிலேயே பிரசவ வலி ஏற்பட்டது., உடனே பக்கத்து அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆண் குழந்தை பிறந்தது, தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர். பின்னர் அந்த பெண் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.
கர்நாடக தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படும். அம்மாநிலத்தில் ஆளும் பாஜக - காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. எனவே அங்கு ஆட்சியை பிடிக்கப் போவது என்பது வரும் 13-ம் தேதி தெரிந்துவிடும்.
இதையும் படிங்க : Karnataka Elections: கர்நாடகாவில் வாக்களிக்க வந்த 2 பேர் மாரடைப்பால் மரணம்