காவல் உதவி ஆய்வாளர் பணி நியமனத்தில் மோசடி... கர்நாடகா ஏடிஜிபி கைது!!
காவல் உதவி ஆய்வாளர் பணி நியமனத்தில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏடிஜிபி அம்ரீத் பால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல் உதவி ஆய்வாளர் பணி நியமனத்தில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏடிஜிபி அம்ரீத் பால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 3 ஆம் தேதி காவல் உதவி ஆய்வாளர் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த தேர்வினை எழுதியவர்களில் சுமார் 107 பேர் முறைகேட்டில் ஈடுப்பட்டது அம்பலமாகியது. இதை அடுத்து இது தொடர்பான வழக்கு கர்நாடக சிஐடி போலீசாருக்கு சென்றது. இதனை விசாரித்து வந்த சிஐடி போலிஸார், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 30க்கும் மேற்பட்டோர் கைது செய்தும் 22 பேர் மீது வழக்குப்பதிவும் செய்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு நடைபெற் தேர்வின் போது உதவி ஆய்வாளர் பணி நியமன தேர்வுக் குழுவின் தலைவராக அம்ரித் பால் என்பவர் இருந்தார்.
இதையும் படிங்க: நம்ம பிரதமர் மோடி மூளையே மூளைதான்.. சீனா பாகிஸ்தானை டரியல் ஆக்கும் சம்பவம்... காஷ்மீரில் G20 மாநாடு
அப்போது 15 பேரிடம் 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு தேர்வு மையத்தில் விடை எழுதும் போது புளூடூத் பயன்படுத்த அனுமதித்தது, தேர்வு மையத்திலேயே விடைத் தாள்களை திருத்தியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்தது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து காவல் உதவி ஆய்வாளர் பணி நியமனத்தில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏடிஜிபி அம்ரீத் பால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜகவை சேர்ந்த திவ்யா என்ற தலைவரும் கைது செய்யப்பட்டிருந்தார். அதுமட்டுமின்றி காங்கிரசை சேர்ந்தவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதையும் படிங்க: இது தான் சார் இந்தியா ... பாகிஸ்தான் ராணுவத்திற்கு மனிதநேயத்தை போதித்த BSF
இந்த நிலையில் ஏடிஜிபி அம்ரீத் பால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிஐடி போலீசார் எம்ரீத் பாலை கைது செய்தனர். தேர்வு முறைகேட்டில் அம்ரீத் பாலுக்கு தொடர்பு இருப்பதாக கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தகவல் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் முதல் முறையாக பணியில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள அம்ரித் பாலிடம் ஏற்கெனவே 4 முறை விசாரணை நடைபெற்ற நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவில் பணியில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.